பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகளை பிரித்தெடுக்கும் சிறப்பு நடவடிக்கை.

ஆசிரியர் - Editor I
பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகளை பிரித்தெடுக்கும் சிறப்பு நடவடிக்கை.

யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் நீண்டகாலம் கழிவுகள் கொட்டப்பட்ட பகு தியில் இருந்து பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகளை பிரித்தெடுக்கும் சிறப்பு நடவடிக்கை கடந்த 8ம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் யாழ்.மாநகரசபை ஆணையாளர் த.ஜெயசீலன், இதுவரை யில் சுமார் 18 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகள் மீட்கப்பட்டதாகவும் கூறியிருக்கின்றார்.

மேற்படி விடயம் தொடர்பாக ஆணையாளர் மேலும் கூறுகையில், கல்லுண்டாய் பகுதியில் யாழ்.மாநகர சபை மற்றும் சில பிரதேச சபைகளால் நீண்டகாலமாக கழிவுகள் கொட்டப்பட்டுவந்தது. இந்த கழிவுகள் தரம் பிரிக்கப்படாமலேயே கொட்டப்பட்டுள்ளது. எனவே அவற்றை பிரிக்கவேண்வேண்டிய அவசியம் எ ழுந்துள்ளது. இதனால் சுமார் 50 தொண்டர்களை கொண்டு சிறப்பு நடவடிக்கை கடந்த 8ம் திகதி ஆரம்பி

க்கப்பட்டுள்ளது. நீண்டகாலம் கழிவுகள் கொட்டப்பட்ட அந்த பகுதியை கனரக வாகனங்களை பயன்படு த்தி கிழறி அங்குள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை அகற்றி வருகிறோம். 8ம் திகதி ஆரம்பி க்கப்பட்டு இன்றுவரை(நேற்று) 18 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை எடுத்திரு க்கின்றோம். இந்த நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு திண்ம கழிவுகள் மட்டும் அங்கே உ

க்குவதற்காக விடப்படும். மேலும் மருத்துவ கழிவுகள் அங்கு கொட்டப்படாது என்பதுடன் மருத்துவ கழி வுகளை யாழ்.மாநகரசபை பொறுப்பேற்கவும் மாட்டாது. இதேபோல் யாழ்.மாநகரசபை எல்லைக்குட்ப ட்ட பகுதியில் மாலை 5 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையில் கழிவுகளை சேகரிக்கும் நடவடிக்கை ஒன்றும் மாநகரசபையினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கை தற்போது யாழ்.மாநகர

த்திற்குள் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. விரைவில் மற்றய பகுதிகளுக்கும் மேற்கொள்ளப்படும். அதே போல் மக்கள் கழிவுகளை கொட்டுவதில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும். கழிவுளை கெ hட்டுவதற்கான தொட்டிகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் வைக்கப்ப ட்டவுள்ளது. அதற்குள் மக்கள் கழிவுகளை பொறுப்பற்ற வகையில் கொட்டகிறார்கள். ஒவ்வொரு நாளு

ம் ஒரு தொட்டியிலாவது இறந்த மிருகம் போடப்பட்டிருக்கும் எனவே மக்கள் பொறுப்புணர்வுடன் கழிவு களை தரம் பிரித்து அகற்றவேண்டும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு