மீள் சுழற்சி ஆலை ஒரு வருடத்திற்குள் நிறுவப்படும்.

ஆசிரியர் - Editor I
மீள் சுழற்சி ஆலை ஒரு வருடத்திற்குள் நிறுவப்படும்.

யாழ்.மாநகரில் சேர்க்கப்படும் திண்ம கழிவுகளை மீள் சுழற்றிக்குட்படுத்துவதற்கான மீள் சுழற்சி ஆலை ஒரு வருடத்திற்குள் நிறுவப்படும். இதன் ஊடாக ஒரு நாளைக்கு 50 மெற்றிக் தொன் திண்ம கழிவுகளை மீள் சுழற்சிக்குட்படுத்த இயலும். என கூறியிருக்கும் யாழ்.மாநகரசபை ஆணையாளர் த.ஜெயசீலன் யா ழ்.மாநகரில் ஒரு நாளுக்கு 70-80 மெற்றிக் தொன் திண்ம கழிவுகள் சேகரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

யாழ்.மாநகரசபை பகுதிக்குள் திண்ம கழிவுகளை முகாமை செய்வதற்கான திட்டங்கள் தொடர்பாக கே ட்டபோதே ஆணையாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இவ் விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறு கையில், ஹவசிமா என்னும் திண்ம கழிவுகளை மீள் சுழற்சிக்குட்படுத்தும் மீள் சுழற்சி ஆலை ஒரு வருட காலத்திற்குள் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் நிறுவப்படும். இந்த ஆலை ஊடாக ஒரு நாளைக்கு 50

மெற்றிக் தொன் திண்ம கழிவுகளை மீள் சுழற்சிக்குட்படுத்தலாம். யாழ்.மாநகரசபை எல்லைக்குள் நான் ஒன்றுக்கு 70 தொடக்கம் 80 மெற்றிக் தொன் திண்ம கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. மேலும் 25 ஆயிரம் லீ ற்றர் மல கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. 50 ஆயிரம் லீற்றர் கழிவு நீர் சேகரிக்கப்படுகின்றது. இவற்றை முகாமை செய்ய முறையான திட்டங்கள் தேவை. தற்போது திண்ம கழிவகளை மீள் சுழற்சிக்குட்படுத்து

வதற்கான மீள் சுழற்சி ஆலை ஒன்று உள்ளது. அதற்கு மேலாகவே புதிய ஆலை உருவாக்க முயற்சிக ள் எடுக்கப்படுகிறது. மேலும் காக்கை தீவு பகுதியில் தற்போதுள்ள மீள் சுழற்சி ஆலையில் நாள் ஒன்று க்கு 50 ஆயிரம் லீற்றர் மல கழிவுகளை சுத்தீகரிக்கும் ஆலை தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்.மா நகர சபை எல்லைக்குள் இருந்து நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் லீற்றர் மல கழிவுகளே சேகரிக்கப்படுகிற

நிலையில் வேறு பிரதேச சபைகள் சிலவற்றில் சேகரிக்கப்படும் மல கழிவுகளையும் எமது சுத்தீகரிப்பு ஆ லைக்கு கொண்டுவருமாறு கூறியுள்ளோம். மேலும் கழிவு நீரை சுத்தீகரிப்பதற்கான ஆலை மாநகரசi பயிடம் இல்லை. அதனையும் நிறுவுவதற்கான துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் கழிவுகளை முகாமை செய்யும் நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு