தமிழ்தேசிய கூட்டமைப்பு ஊடகங்களை அடக்க நினைக்கிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு.

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பு ஊடகங்களை அடக்க நினைக்கிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு.

உலகத்திற்கு தங்களை ஜனநாயகத்தின் காவலாளிகளாக காண்பிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் இன்றைக்கி வன்முறை ஊடாகவும், அதிகாரம் ஊடாகவும், தாங்கள் நினைப்பதை ஊடகங்கள் ஊடாக மக்களிடம் திணிக்க நினைக்கிறார்கள். ஏக்கிய இராஜ்ய என்பது ஒற்றையாட்சியே என ஊடகங்கள்   சொல்வது பொய் அல்ல. அது தமிழ் இனத்திற்கு ஊடகங்கள் செய்யவேண்டிய மிகப்பெரிய கடமையாகும்.

மேற்கண்டவாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியு ள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில்  நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கஜேந்திர குமார் மேற்கண்டவாறு கூறியிருந்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், அண்மையில் நடைபெ

ற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஊடகங்கள் திருந்துங்கள் அல்லது திரு த்தப்படுவீர்கள் என அக் கட்சியின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறி யுள்ளார். ஏக்கிய இராஜ்ய என்பது ஒற்றையாட்சியே என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமையி னை தொடர்ந்தே சுமந்திரன் அந்த கருத்தை கூறினார். இது வன்முறை மற்றும் அதிகாரம் ஊடாக தாங்

கள் விரும்பும் கருத்துக்களை மக்களிடம் திணிப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுக்கும் நடவடிக்கை யே ஆகும். பிரித்தானியா போன்ற நாடுகளை உதாரணம் காட்டி யுனிட்டரி ஸ்டேட் இந்த நாட்டுக்கு பொ ருத்தமற்றது என இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டதை ஒற்றையாட்சி இந்த நாட்டுக்கு பொருத்தம ற்றது என கூறியுள்ளதாக சுமந்திரன் கூறும்போது ஏக்கிய இராஜ்ய என்பது ஒருமித்த நாடு அல்ல. ஒற்

றையாட்சியே என ஊடகங்கள் எழுதுவது பொய் அல்ல. அது தமிழ் இனத்திற்கு ஊடகங்கள் செய்யவே ண்டிய மிகப்பெரிய கடமையாகும். மேலும் இவர்கள் தங்களை ஜனநாயகத்தின் காவலாளிகளாக காட் டிக்கொண்டு மறுபக்கம் ஊடகங்களை அடக்கும் செயலாகவே அமைகிறது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு