பௌத்தத்திற்கு முதலிடம் கொடுத்துள்ள த.தே.கூட்டமைப்பு? -

ஆசிரியர் - Editor II
பௌத்தத்திற்கு முதலிடம் கொடுத்துள்ள த.தே.கூட்டமைப்பு? -

த.தே.கூட்டமைப்பு புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை ஒன்றை தயாரித்து, அதில் ஒற்றையாட்சியை அங்கீகரித்து, பௌத்தத்திற்கு முதலிடம் கொடுத்திருக்கிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக நேற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களை சந்தித்து பேசியிருந்தார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடைய பொங்கல் தின வாழ்த்து செய்தியில் சகல மக்களினதும் இறைமை மதிக்கப்பட்டு, உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சியுடன் கூடிய நிரந்தரமான தீர்வினை வழங்க வேண்டும் என கூறியுள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி, சுயநிர்ணய உரிமை, வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பு, இறையாண்மை போன்றவற்றின் அடிப்படையில் தீர்வு கிடைக்கவேண்டும் என கூறியிருந்தது.

இவற்றுக்கு எதிராக ஒரு தீர்வு வருமாக இருந்தால் அதனை எதிர்ப்போம் என கூறியிருந்தார்கள். ஆனால் இன்று இலங்கை அரசாங்கத்துடன் பங்காளிகளாக மாறி புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான இடைக்கால அறிக்கை ஒன்றை தயாரித்து, அதில் ஒற்றையாட்சியை அங்கீகரித்து வடக்கு, கிழக்கு இணைப்பை மறந்து, பௌத்தத்திற்கு முதலிடம் கொடுத்திருக்கிறது.

அதற்கு மேலாக தாம் இணங்கிய ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு மக்கள் ஆணையை வழங்க வேண்டும் என மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சாரமும் செய்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கூட்டமைப்பின் தலைவர் உள்ளக சுயநிர்ணய உரிமை எனவும், சுயாட்சி எனவும், இறைமை மதிக்கப்பட்டு என கூறுவதையும் நகைப்புக்குரிய ஒரு கருத்து என கூறுவதில் தவறு எதுவும் இருக்காது.

மேலும் உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதே ஒரு மோசமான விடயம். இருந்தும் ஒரு பேச்சுக்கு உள்ளக சுயநிர்ணயம் என சொன்னால் இடைக்கால அறிக்கையில் இறைமை பகிரப்பட முடியாதது என கூறப்பட்டுள்ளது.

சமஷ்டி இல்லவே இல்லை என்கிறது இடைக்கால அறிக்கை. இந்த இலட்சணத்தில் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறமை மதிக்கப்படல், சுயாட்சி என்பற்றை இரா.சம்மந்தன் எங்கே எடுக்கபோகிறார்?

ஆக மொத்ததில் சம்பந்தனின் இந்த உரை நகைப்புக்குரியது மட்டமல்ல. நொந்துபோய் கிடக்கும் தமிழ் மக்களின் தொண்டைக் குழியை நெரிக்கும் வகையிலான ஒரு கருத்தாகும் என குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு