3வது சா்வதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்..! அபிவிருத்தி பணிகளை தொடக்கிவைத்தாா் அமைச்சா் அா்ஜின..

ஆசிரியர் - Editor I
3வது சா்வதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்..! அபிவிருத்தி பணிகளை தொடக்கிவைத்தாா் அமைச்சா் அா்ஜின..

சா்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகளின் தொடக்க விழா இன்று பலாலி விமான நிலையத்தில் இடம்பெற்றது. 

19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை நடத்தக் கூடிய வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று பலாலி விமான நிலையத்தில், இதன்போது அமைச்சர் அர்ஜூன ரணதுங்க விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகளை அங்குரா்ப்பணம் செய்தாா் 

இந்நிலையில் இரண்டு கட்டங்களாக பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் தொடர்புடைய வசதிகளை மேற்கொள்வது முதலாவது கட்டப் பணிகளாக முன்னெடுக்கப்படும்.

விமான நிலையம் கணிசமான விமானப் போக்குவரத்தை ஈர்த்தவுடன், இரண்டாவது கட்டமாக, நிரந்தரமான முனைய கட்டடங்கள் கட்டப்படும்.

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை, 3500 மீற்றர் நீளம் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டு, A320, A321 போன்ற பாரிய பயணிகள் விமானங்கள் 

தரையிறங்கக் கூடிய வசதிகள் செய்யப்படவுள்ளன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு