தமிழகத்தில் 1.34 கோடி பேருக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு இணைப்பு!

ஆசிரியர் - Admin
தமிழகத்தில் 1.34 கோடி பேருக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு இணைப்பு!

இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 34 லட்சம் பேருக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயதேவன் தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குநர் ஜெயதேவன், தமிழகத்தில் இதுவரை இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ஒரு கோடியே 34 லட்சம் பேருக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் மட்டும் 16 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சிறைக்கைதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக 5 இடங்களில், சிறைகளுக்கு அருகில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 6 இடங்களில் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Radio
×