டாண் தொலைக்காட்சி பெயரில் பதுங்கி இருந்த பூனை வெளியே வருகிறது: வந்தார் டாண் குகநாதன்?

ஆசிரியர் - Admin
டாண் தொலைக்காட்சி பெயரில் பதுங்கி இருந்த பூனை வெளியே வருகிறது: வந்தார் டாண் குகநாதன்?

டாண் தொலைக்காட்சி பெயரில் பதுங்கியருந்து இடதுசாரி சிந்தனைகள் பேசிக்கொண்டிருந்த குகநாதன் வெளியே வந்துள்ளார்.சிறீலங்கா சுதந்திர கட்சியின் 12 பிரச்சார அலுவலகங்களை திறந்து வைப்பதாக மைத்திரியிடம் உறுதியளித்து பதவி பெற்றிருந்த குகநாதன் அதன் முதலாவது அலுவலகத்தை காரைநகரில் திறந்துவைத்துள்ளார்.

அப்பிரதேசத்திற்கான அலுவலகம் நேற்று(14) இரவு 8 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் மீன்பிடி மற்றும் கடற்றொழில் வள அமைச்சருமான மகிந்த அமரவீர அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அலுவலகத்தினை திறந்து வைத்தார்.

சுதந்திர கட்சியின் வட்டுகோட்டை தொகுதி அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் கோபாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களின் யாழ் மாவட்ட இணைப்பாளர் குகநாதன், சிறீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் செவ்வேள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் அவர்கள் கௌரவ ஜனாதிபதி அவர்களின் சக்தியை செயல்வடிவத்தினை உங்கள் கிராமத்திற்கு கொண்டு வந்து தருபவர்களாக உங்கள் கிராமத்தின் வேட்பாளர்கள் காணப்படுகின்றார்கள்.

அதேபோன்று எனது அமைச்சின் அபிவிருத்திப் பணிகளையும் ஏனைய அமைச்சின் அபிவிருத்திகளையும் உங்கள் வீடுகளுக்கு கொண்டுவரும் சக்தியாக உங்களது வேட்பாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் கரங்களை நீங்கள் பலப்படுத்துங்கள். கை சின்னத்திற்கு வாக்களித்து உங்கள் பிரநிதிகளை நீங்கள் தெரிவு செய்து உங்கள் கிராமங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல முடியும் நான் வரும்போது பல விடயங்களை இங்கே அவதானித்திருந்தேன். 

இங்கே இரண்டு பிரதான பிரச்சினைகள் காணப்படுவதாக தெரிகிறது ஒன்று குடிநீர் பிரச்சினை மற்றயது அருகாமையில் அமைந்துள்ள பாலம் ஒன்று இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக்கொடுப்பேன் என்ற நம்பிக்கையுடன் உங்களை மீண்டும் வெற்றியுடன் சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

இதுவரை நடுநிலை ஊடகம் என அல்லக்கைகள் பலவும் டாண் தொலைக்காட்சிக்கு வெள்ளையடித்துக்கொண்டிருக்கையில் தற்போது அதன் உரிமையாளர் மைத்திரியிடம் பதவி பெற்று பகிரங்கமாக மேடையேறியுள்ளமை உண்மையினை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு