யாழ்ப்பாணம் வடமராட்சி வேவில் பிள்ளையார் ஆலயதில் பொங்கல் பெரு விழா.

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் வடமராட்சி வேவில் பிள்ளையார் ஆலயதில் பொங்கல் பெரு விழா.

தமிழர் திருநாளாம் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் வடமராட்சி வேவில் பிள்ளையார் ஆலயதில் பொங்கல் பெரு விழா நடை பெற்றது.

பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்து கொண்டார்.

பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வாத்தியக்கருவிகள் மற்றும் மயிலாட்டம் கரகாட்டம் குதிரை நடனம் கோலப்போட்டி மற்றும் சுவையான பொங்கல் போட்டியும் நடைபெற்றது.

வருடாவருடம் உதய சூரியன் உல்லாச கடற்கரையில் நடைபெற்று வரும் பட்டதிருவிழா இம்முறையும் விமரிசையாக விதம் விதமான முறையில் சமுகத்திற்கு மாற்றத்தை சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடிய முறையில் வானில் இராட்சத பட்டங்கள் பறக்கவிடப்பட்டன

இந்த நிகழ்விற்கு மீன்பிடித்துறை அமைச்சரை அழைப்பதற்கான ஏற்பாட்டை ஒழுங்கு செய்து தருமாறு விழா ஏற்பாட்டு குழுவினர் அங்கஜன் இராமநாதனிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து விசேட அழைப்பின் பிரகாரம் நேற்றைய தினம் பலாலி விமான நிலையம் ஊடாக வருகை தந்து நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேலும் அப் பிரதேச மக்களின் மேலதிக கோரிக்கையாக இறங்குதுறை ஒன்றை புனரமைத்தும் பட்டம் ஏற்றுவதற்கான இடப் பரப்பை அதிகரிக்க ஏற்பாடு செய்து தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் விடுத்த வேண்டுகோளை உடனடியாகவே அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களும் ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்திருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு