தமிழ் மக்கள் பேரவையின் புதிய கட்சிக்கு மாடி வீடு சின்னம் பரிந்துரை!

ஆசிரியர் - Editor II
தமிழ் மக்கள் பேரவையின் புதிய கட்சிக்கு மாடி வீடு சின்னம் பரிந்துரை!

தமிழ் மக்கள் பேரவையினால் ஆரம்பிக்கப்படவுள்ள முண்ணனியினால் தேர்வு செய்யப்பட்ட மகரயாழ் சின்னம் தொடர்பில் அதிருப்தி அதிகரித்தமையினால் மாடிவீட்டுச் சின்னம் பரிந்துரைக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக களமிறங்கத் திட்டமிட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சுரேஸ் அணிகளிற்கு பேரவையின் ஆதரவோடு புதிய முண்ணனி உருவாக்கம் தொடர்பான செயல்பாடு மும்முரமாக இடம்பெறும் நிலையில் குறித்த முண்ணனிக்காக ஆரம்பத்தில் மகரயாழ் தேர்வு செய்யப்பட்டது.

குறித்த யாழ் ஆனது யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இருமாவட்டங்களை மட்டுமே அடையாளப்படுத்துவதனால் ஏனைய மாவட்டத்திற்கு இதில் பங்கு இல்லையா என வவுனியா தரப்பு உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் முதலில் தேர்வு செய்த சின்னம் வெளிவராமலே மறைந்துவிட்டது.

இதன் பிரகாரம் தற்போது உருவாக்கப்படும் முண்ணனிக்கான சின்னம் தமிழரசுக் கட்சியின் சின்னத்துடன் குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் வாக்கை சிதறடிக்கும் முயற்சியாகவும் கருதப்படுகின்றது.

இவ்வாறு மற்றுமோர் கட்சியின் சின்னத்தை ஒத்த சின்னம் வழங்குவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது தேர்தல் காலத்தில் சில கட்சிகள் சேர்ந்து கூட்டு ஏற்படுத்தும் வாய்ப்பு தேர்தலில் உள்ளது.

ஆனால் சின்னத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னத்தையோ அல்லது அக் கட்சிகளின் சின்னத்தில் ஆதிக்கும் செலுத்தும் வகையிலான சின்னங்களோ வழங்கப்பட மாட்டாது.

உதாரணமாக ஓர் கட்சிக்கு யாணை அல்லது இன்னுமோர் கட்சிக்கு கை வழங்கப்பட்ட நிலையில் பிறிதொரு கட்சி இரட்டை யானை அல்லது இரட்டை கை என்றோ அல்லது ஓர் கட்சிக்கு முச்சக்கர வண்டிச் சின்னம் வழங்கப்பட்டுள்ள நிலையில் பிறிதொரு கட்சி தற்போது அறிமுகமாகும் செயார் முச்சக்கர வண்டி நீளம்கூடியது எனக்கூறி கோரமுடியாது, எனப் பதிலளித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு