மாவீரர்களை நினைவுகூருவதற்கு எதிராக கொடுக்கப்படும் அச்சுறுத்தலா? வாள்வெட்டு!

ஆசிரியர் - Editor II
மாவீரர்களை நினைவுகூருவதற்கு எதிராக கொடுக்கப்படும் அச்சுறுத்தலா? வாள்வெட்டு!

யாழ்.மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்திருக்கும் வாள்வெட்டு சம்பவங்கள் மாவீரர்களை நினைவுகூருவதற்கு எதிராக கொடுக்கப்படும் அச்சுறுத்தலா? என சிந்திக்கவேண்டியிருப்பதாக வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக நேற்றையதினம்(16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவை தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்.....

வாள்வெட்டு சம்பவங்களுக்கு பின்ணணி இருப்பதாக எண்ணவேண்டியுள்ளது என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம்; தெரிவித்தார்.

யாழ்.கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றபோது நான் அந்த வழியாக வந்திருந்தேன்.

மக்கள் அங்கே மிகுந்த அச்ச உணர்வுடன் நின்றிருப்பதை நான் நேரடியாக பார்க்க நேர்ந்தது.
சில மாதங்களுக்கு முன்னர் வாள்வெட்டு சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியிருந்தார்கள்.

அதில் உண்மையும் இருந்தது. ஆனால் இப்போது சடுதியாக வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றது.

இது யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை காட்டுகிறது. எனவே சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் அதனை இறுக்கமாக நடைமுறைப்படுத்தவேண்டும்.

இதேவேளை பொதுவாக நவம்பர் மாதம் மாவீரர்களை நினைவுகூரும் மாதமாகும்.

இந்த சூழலில் திடீரென வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை மாவீரர்களை நினைவுகூருவதற்கு எதிரான அச்சுறுத்தலா என எண்ணவேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த காலங்களில் புலிகள் தாக்குதல்களை நடத்தியபோது அவர்கள் என்ன காரணத்திற்காக தாக்குதலை நடத்தினோம் என சொன்னார்கள். ஆனால் இப்போது அவ்வாறில்லை.

சில இளைஞர்கள் வாள்களுடன் வந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பி செல்கிறார்கள்.எனவே இது மோசமான ஒரு நிலமையாகும் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு