முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு எந்த இடையூறும் ஏற்படுத்தமாட்டோம் – மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்

ஆசிரியர் - Admin
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு எந்த இடையூறும் ஏற்படுத்தமாட்டோம் – மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு எந்த இடையூறும் ஏற்படாது என முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததையடுத்து, நினைவேந்தல் ஏற்பாடுகள் தீவிரம் பெற்றுள்ளன.

நினைவேந்தல் குழுவின் பிரதிநிதிகளை அழைத்து பேசிய, மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், நினைவேந்தலிற்கு எந்த இடையூறும் ஏற்படாதென தெரிவித்திருந்தார்.

அதேவேளை, சர்ச்சைக்குரிய விதமாக நினைவேந்தலை நடத்த வேண்டாமென்றும் தெரிவித்திருந்தார். மாவட்ட பொலிஸ் அத்தியட்சரின் தகவல் கிடைப்பதற்கு முன்னர், நினைவேந்தல் குழு குழப்பத்தில் இருந்தது. விளக்கேற்றும் கம்பங்கள் நடுவதா, சிவப்பு மஞசள் கொடி கட்டலாமா என்ற குழப்பத்தில் இருந்தவர்கள், தற்போது அந்த பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

நினைவேந்தல் நடக்கும் இடம் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை போலவே இம்முறையும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Ads
Radio
×