17 பாதுகாப்பு வீடுகள், 7 பயிற்சி நிலையங்கள் தீவிரவாதிகளின் அதிா்ச்சிகரமான பின்னணி..
இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகள் 17 பாதுகாப்பு வீடுகளையும், 7 பயிற்சி நிலையங்களையும் வைத்திருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளா் ருவாண் குணசேகர கூறியுள்ளாா்.
இதன்படி, வணதவில்லுவ, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, கண்டி, அருப்புக்கல, காத்தான்குடி, மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் காணப்படும் முகாம்களில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான பயிற்சி
நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு, கட்டுவபிட்டிய, பானந்துர, சர்கிகமுல்ல, கொள்ளுப்பிட்டியில் உள்ள செயின்ட் அந்தோனி வீதி, கல்கிஸயில் உள்ள ட்ரோப்பிகோ வீதி, வணதவில்லுவ, வத்தளை எந்தாரமுல்ல,
மயூரா பிளேஸ் வெள்ளவத்தை, சாய்ந்தமருது 09, மல்வான, திஹாரிய, கலகெடிஹென, கொச்சிக்கடே, தலுவகொட்டுவ, வாழைச்சேனை-ரிதியதென்ன, குலியப்பிட்டி - சபரித்திபுர, ஹெட்டிபொல, கடுபொத்த, நிந்தாவூர்
மற்றும் சம்மாந்துர பகுதிகளில் பாதுகாப்பாக வீடுகள் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.