2019 ஐபோன்களில் இந்த அம்சம் நிச்சயம் வழங்கப்படுமாம்

ஆசிரியர் - Admin
2019 ஐபோன்களில் இந்த அம்சம் நிச்சயம் வழங்கப்படுமாம்

ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வழங்கும் தாய்வான் நாட்டு நிறுவனம் புதிய ஐபோன்களில் வழங்குவதற்கான சிப்செட்களை உற்பத்தி செய்ய துவங்கி விட்டதாக தெரிவித்துள்ளது. ஆப்பிள் ஏ13 என்ற பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய சிப்செட்கள் உற்பத்தியானதும் அவை சோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது.

புதிய சிப்செட்கள் இம்மாத துவக்கத்தில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் என தெரிகிறது. ஆப்பிள் ஏ13 சிப்செட் 2019 ஐபோன் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. புதிய 2019 ஐபோன் மாடல்கள் ஐபோன் 11 என்ற பெயரில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனையில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாத பட்சத்தில் இம்மாத இறுதியில் புதிய சிப்செட்கள் அதிகளவு உற்பத்தி பணிகள் துவங்கலாம்.

ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது ஐபோன்களில் புதிய சிப்செட்களை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இதன் மூலம் புதிய ஐபோன்களின் வேகம் மற்றும் பேட்டரி பயன்பாட்டை மேம்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு ஐபோன்கள் D43 மற்றும் D44 என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 2019 ஐபோன் XR N104 என்ற பெயரில் உருவாகிறது. 

புதிய 2019 ஐபோன்களின் வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள் இருக்காது என்ற வகையில், புதிய ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் மொத்தம் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஐபோன் XR மாடலின் 2019 வெர்ஷனில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

அந்த வகையில் 2019 ஐபோன்களில் கேமரா அம்சம் அதிகளவு மாற்றங்களை பெற இருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை மிக தெளிவாக படம்பிடிக்க அல்ட்ரா-வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஐபோன் XR மாடலின் மேம்பட்ட மாடலில் கூடுதல் சென்சார் சூம் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு