ஆலய குரு விவகாரம்:பின்வாங்கினார் ஈ.சரவணபவன்?

ஆசிரியர் - Admin
ஆலய குரு விவகாரம்:பின்வாங்கினார் ஈ.சரவணபவன்?

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் ஆலயங்களுடன் இணைந்ததாகவே பொதுமண்டபங்கள்,சனசமூக நிலைய கட்டடங்கள் உள்ளநிலையில் மதவழிபாட்டிட சூழலில் பிரச்சாரங்கள் செய்யக்கூடாதென்ற அறிவுறுத்தல் பொருத்தமற்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை ஆலயக்குருக்கள் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் எமது வாழ்வு முற்றுமுழுதாக ஆலயங்களுடன் தொடர்புபட்டது.அதனால் பொதுமண்டபங்கள்,சனசமூக நிலைய கட்டடங்கள் ,முன்பள்ளிகளென அனைத்தும் ஆலய சூழலிலேயே உள்ளன.இந்நிலையினில் நடத்தப்படும் கூட்டங்கள் ஆலய சூழலில் நடக்கும் கூட்டங்களென அடையாளப்படுத்த முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே மாவிட்டபுரம் ஆலயக்குருக்கள் மல்லாகம் நீதிமன்றிற்கு இன்று அழைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டாக உருவாக்கியுள்ள தமிழ் தேசியப்பேரவை தனது கட்சி நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் சிறுகூட்டமொன்றை அண்மையில் ஆலயத்தில் வழிபாட்டுடன் நடத்தியிருந்தது.வழமையாக ஆலயத்திற்கு வழிபட வருபவர்களினை ஆசீர்வதிப்பது போல ஆலய குரு ஆசீர்வதித்திருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான பிரச்சாரமென அடையாளப்படுத்தியுள்ளார்.

இதேவேளை தமிழரசுக்கட்சி ஆதரவு நாளிதழது ஆசிரிய பீடத்தை சேர்ந்தவர்களென தெரிவித்து சிலர் தன்னை தொலைபேசி வழி மிரட்டியதாக ஆலய குரு பின்னர் தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக தேர்தல் திணைக்களம் ஊடாக காங்கேசன்துறை காவல்நிலையத்திற்கு தமிழ் அரசுக் கட்சி அழுத்தம் கொடுத்ததையடுத்து ஆலய குரு இன்று மல்லாகம் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.அவரிற்கு தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் நீதிபதியால் அறிவுறுத்தல வழங்கப்பட்டிருந்தது.
இதனிடையே இந்து மதகுருவொருவரை அரசியல் நோக்கங்களிற்காக நீதிமன்ற குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முற்பட்டுள்ளமை மத அமைப்புக்களிடையே கடும் சீற்றத்தை தோற்றுவித்திருந்தது.

இதனையடுத்து விழுந்தடித்துக்கொண்டு சரவணபவனும் அவரது ஆதரவாளர்களும் ஆலயக்குருவிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு