விசன் நிறுவனத்தின் கேபிள் இணைப்புகள் விசமிகளால் வெட்டித்துண்டாடப்பட்டுள்ளன

ஆசிரியர் - Editor II
விசன் நிறுவனத்தின் கேபிள் இணைப்புகள் விசமிகளால் வெட்டித்துண்டாடப்பட்டுள்ளன

தொலைத்தொடர்பு ஆணைக்குழுவில் பதிவு செய்து யாழ்ப்பாணத்தில் இயங்கும் எ.எஸ்.கே கேபிள் விசன் நிறுவனத்தின், கேபிள் இணைப்புகள் நாவற்குழி பகுதியில் நேற்றிரவு விசமிகளால் வெட்டித்துண்டாடப்பட்டுள்ளன.

கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் வடமாகாணத்தில் சட்டவிரோதமாக இயங்கும் கேபிள் வழங்குநர்கள் தமது செயற்பாட்டை நிறுத்துமாறும், தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வடக்கில் கேபிள் இணைப்புகளை வழங்குவதற்கு தொலைத்தொடர்பு ஆணைக்குழுவினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள எ.எஸ்.கே கேபிள் விசன் நிறுவனத்தின் கேபிள் இணைப்புகள் நாவற்குழி பகுதியில் நேற்றிரவு விசமிகளால் வெட்டித்துண்டாடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் எ.எஸ்.கே கேபிள் விசன் நிறுவனத்தினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த மாதம் நடுப்பகுதியிலும் எ.எஸ்.கே கேபிள் நிறுவனத்தினரின் கேபிள் இணைப்புக்கள் பல்வேறு இடங்களில் வெட்டித்துண்டாடப்பட்டிருந்தன. இது தொடர்பில் கொடிகாமம், சாவகச்சேரி, மானிப்பாய் ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு