த.தே.கூட்டமைப்புக்கு எதிராக பிறந்த புதிய ‘கூட்டமைப்புக்கு’ தேர்தல் ஆணைக்குழு தடை!

ஆசிரியர் - Editor II
த.தே.கூட்டமைப்புக்கு எதிராக பிறந்த புதிய ‘கூட்டமைப்புக்கு’ தேர்தல் ஆணைக்குழு தடை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இவர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என்ற தமது கட்சியின் பெயரை பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக் குழுவினருக்கும், கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையே நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில், “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என்ற பெயர், தமது கட்சியின் பெயரை ஒத்ததாக உள்ளது. ஆகவே இந்த பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதை ஆராய்ந்த தேர்தல்கள் ஆணைக்குழு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்துவதற்கு தடைவிதித்துள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில், ஆனந்த சங்கரி தலைமையில், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் ஒன்றிணைந்து “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என்ற பெயரில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கின.

இந்த நிலையில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்துவதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு