கன்ரீனில் நேரம் செலவிடும் மாகாணசபை உறுப்பினரின் சகோதர ஆசிரியர்!

ஆசிரியர் - Editor II
கன்ரீனில் நேரம் செலவிடும் மாகாணசபை உறுப்பினரின் சகோதர ஆசிரியர்!

அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சகோதரனுக்கு சிற்றுண்டிச்சாலை ஒப்பந்தம் பெற்றுக்கொடுத்திருக்கிறார் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன். அதனால் சகோதரன் கற்பிக்கும் வகுப்பு மாணவர்கள் கல்வியை இழந்துவரும் அவல நிலை குறித்து நெல்லியடி மத்தியகல்லூரியில் சலசலப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வடக்கு மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி நெல்லிடிய மத்தியகல்லூரி சிற்றுண்டிச்சாலை (கன்ரீன்) ஒப்பந்தத்தை அதே பாடசாலையில் கற்பிக்கும் தனது சகோதரனுக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றார்.

வடமராட்சியின் பிரபல்யமான கல்லூரியாகிய குறித்த பாடசாலையில் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களும் ஆசிரியர்களும் சிற்றுண்டிச்சாலையை பயன்படுத்திவருவதால் நாள் தோறும் பல்லாயிரும் ரூபாய் இலாபம் கிடைப்பதாகவும் இதனால் குறித்த சிற்றுண்டிச்சாலை நிர்வாகத்தை கைப்பற்ற பலத்த போட்டி நிலவிவருவதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் குறித்த சிற்றுண்டிச்சாலையை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதற்கான முயற்சியினை மாகாணசபை உறுப்பினர் ச.சுகிதர்தன் கையிலெடுத்து தன்னுடைய செல்வாக்கினை முழுமையாக பிரயோகித்து சிற்றுண்டிச்சாலையை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்திருக்கிறார்.
இதனால் நீண்டகாலமாக அந்தப் பணியினை முன்னெடுத்துவந்தவர்கள் வெளியேற்றப்பட்டிருப்பதால் அவர்கள் தொழில்த் துறையில் நெருக்கடியை எதிர்கொண்டுவருவதாக தெரியவருகிறது.

இதனிடையே அதே கல்லூரியில் கற்பிக்கும் சுகிர்தனின் சகோதரன் பாடசாலை நேரத்தில் வகுப்பறையை விடவும் சிற்றுண்டிச் சாலையிலேயே நேரத்தினை கூடுதலாக செலவிடுவதாக மாணவர்கள் கவலை வெளியிட்டுவருகின்றனர்.

அவர் கற்பிக்கும் பாடங்கள் உரிய காலத்தில் கற்பிக்கப்படுவதில்லை என்றும் இது மாணவர்களை வெகுவாகப் பாதிப்பதாகவும் பெயர்குறிப்பிடவிரும்பாத கல்லூரி ஆசிரியை ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் வடக்குமாகாணசபை உறுப்பினர் சுகிர்தனை தொடர்புகொண்டு கேட்க முற்பட்டபோது அவர் தொலைபேசிக்கு பதிலளிக்கவில்லை. இது தொடர்பில் அவர் விளக்கமளித்தால் அதனை பிரசுரம் செய்தவற்கு தயாராக உள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு