யாழில் மாம்பழத்தால் ஏமாந்த தேர்தல் திணைக்களம்!! யாழ் இந்துவில் நடந்தது என்ன?

ஆசிரியர் - Editor II
யாழில் மாம்பழத்தால் ஏமாந்த தேர்தல் திணைக்களம்!! யாழ் இந்துவில் நடந்தது என்ன?

தேர்தல் ஆணையகத்திற்கு வழங்கப்பட்ட தவறான தகவலால் யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த சுற்றுசூழல் தொடர்பான நிகழ்ச்சி சிறிதுநேரம் தாமதமடைந்துள்ளது. இந்த சம்பவம் இன்று யாழ் இந்துக்கல்லூரியில் நடந்தது.

இன்ரரிகிளப் ஏற்பாடு செய்த பூமாதேவி என்ற சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சி இரண்டு மாதங்களின் முன் திட்டமிடப்பட்டிருந்தது. இதில் பேச்சாளராக வடமாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொள்ளவிருந்தார். அதற்கான அழைப்பிதழ்களும் வெளியிடப்பட்டிருந்தன.

இந்தநிலையில், தேர்தல் ஆணையகத்தை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் யாரோ சிலர் செயற்பட்டுள்ளனர். அந்த அழைப்பிதழ்களில் மாம்பழ சின்னத்தையும் இணைத்து, அது அரசியல் கூட்டம் என அறிவித்துள்ளனர்.

நல்லூர் பிரதேசசபை தேர்தலில் ஐங்கரநேசனின் சார்பாக சுயேச்சை குழுவொன்று மாம்பழ சின்னத்தில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொண்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள், நிகழ்வை நடத்த கூடாதென அறிவித்துள்ளனர்.

எனினும், அது சுற்றுச்சூழல் நிகழ்வு, இரண்டு மாதங்களின் முன் திட்டமிடப்பட்டதென்பதை ஏற்பாட்டாளர்கள் புரிய வைத்துள்ளனர்.

நிகழ்வை ஒளிப்பதிவு செய்தும் தருவோம் என கூறியதையடுத்து, நிகழ்விற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று நிகழ்வு நடக்கவிருந்த சமயத்தில் பொலிசாரும் சம்பவ இடத்திற்கு வந்து, அது தொடர்பான விபரங்களை பெற்றுள்ளனர். இதனால் நிகழ்வு தாமதமாகவே தொடங்கியது.

நல்லூர் பிரதேசசபை பிரதே

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு