யாழ்.கோட்டைக்குள் இராணுவத்தை போக சொல்லுங்கள். ஆளுநர் ஐனாதிபதிக்கு கடிதம்

ஆசிரியர் - Editor I
யாழ்.கோட்டைக்குள் இராணுவத்தை போக சொல்லுங்கள். ஆளுநர் ஐனாதிபதிக்கு கடிதம்

யாழ்ப்பாணத்தில் மக்களுடைய காணிகளில் இருக்கும் இராணுவத்தை யாழ்.கோட்டைக்குள் இருக்க அனுமதிப்பதன் ஊடாக மக்களுடைய காணிகளை மக்களிடம் மீள வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே கூறியுள் ளார்.

இன்று ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஆளுநர் மேற்படி விடயத் தை கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் பொதுமக்களின் காணி களில் மக்களுடைய இயல்பு வாழ்வுக்கு இடையூறாக இருக்கும் படையினரை யாழ்.கோட்டைக்குள் மு காம்

அமைத்து தங்கவைத்து மக்களுடைய காணிகளை மக்களிடம் மீள வழங்குங்கள் என ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார். இதன்போது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணியை அவர்கள் வழங்குவார்களா என ஊடகவியலாளர்கள் கேட்டபோது, அங்கே பே hர்த்

துகீசர்கள், பிரித்தானியர்கள், இலங்கை இராணுவம், புலிகள் என பலர் இருந்தார்கள். அப்போது எங்N க போனீர்கள் என கேள்வி எழுப்பிய ஆளுநர் யுத்தம் முடிந்து விட்டது என்பதால் எல்லாவற்றையும் து டைத்து எடுப்பதா? எனவும் கேள்வி எழுப்பினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு