ஆளுநர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாது நின்ற வட மாகாண சுகாதார அமைச்சர்! -

ஆசிரியர் - Editor II
ஆளுநர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாது நின்ற வட மாகாண சுகாதார அமைச்சர்! -

தமது சொந்த மாகாணத்தில் கடமையாற்ற விரும்பாது வட மாகாண வைத்தியர்கள் வெளியேறும் போது வெளி மாகாண வைத்தியர்கள் இங்கு வந்து பணியாற்றுவார்களா என ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பியுள்ளாார்.

வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வின் போது வட மாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் கலந்த கொண்ட வடக்கு சுகாதார அமைச்சரிடம் ஆளுநர் இந்தக் கேள்வியைக் கேட்டதாக அவர் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வின் போது கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதன் போது கருத்துரைத்த அமைச்சர்,

வடக்கு மாகாணத்தில் வைத்தியர்களின் பற்றாக்குறை மிகக் குறைவாக இருக்கின்றது. அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. எனவே இந்த விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் என்று ஆளுநரிடம் வலியுறுத்தினேன்.

இதற்குப் பதில் வழங்கிய ஆளுநர், தங்கள் சொந்த மாகாணத்தில் உள்ள வைத்தியர்கள் கொழும்புக்குச் சென்று கடமையாற்ற விரும்பி வெளியேறுகிறார்கள்.

இவர்கள் வட மாகாணத்தை விட்டு அங்கு செல்லும் போது அங்குள்ள மருத்துவர்கள் எப்படி வடக்கு மாகாணத்திற்கு விரும்பி வருவார்கள் என்று பதில் கேள்வி கேட்கிறார்.

ஆளுநரின் இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? மௌனமாகத் தான் இருந்தேன் என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு