உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்திய அரசியல் கைதிகளுக்கு விரைவில் தீர்வு.

ஆசிரியர் - Editor I
உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்திய அரசியல் கைதிகளுக்கு விரைவில் தீர்வு.

அனுராதபுரம் நீதிமன்றுக்கு தமது வழக்குக ளை மாற்றவேண்டாம் எனக்கோரி 40 நாட் களுக்கும் மேலாக உணவு தவிர்ப்பு போரா ட்டத்தை நடத்தியிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 3 பேருடைய வழக்குகள் அனுரா தபுரத்திக்கு மாற்றப்படாத படி சிறந்த தீர்வு 29ம் திகதி வரும் என ரெலோ அமைப்பின் கொள்கை பரப்பு செயலாளரும் சிவன் அற க்கட்டளை நிறுவுனருமான கணேஷ் வே லாயுதம் கூறியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக இன்று யாழ். ஊடக அமைந்தில் நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத் து தெரிவிக்கும்போதே அவர் மேற்கட்ண வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

தமிழ் அரசியல் கைதிகள் 3 பேருடைய வழ க்குகள் அனுராதபுரத்துக்கு மாற்றப்படகூ டாது எனகோரி மேன்முறையீட்டு நீதிமன் றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட் டபோது 3 சாட்சிகளில் ஒரு சாட்சி வவுனி யாவில் வழக்கை நடத்த இணங்கியுள்ளார்.

மற்றய 2 சாட்சிகள் நாட்டில் இல்லை.

அவர்கள் வெளிநாட்டில் உள்ளதாக கூறுயு ள்ளார். இந்நிலையில் வழக்கு தொடர்பாக சட்டதரணியுடன் பேசியபோது 29ம் திகதி வழக்கு எடுக்கப்படும்போது சட்டமா அதிப ருடைய கருத்து எடுபடாது மேன்முறையீட் டு நீதிமன்ற நீதிவானின் கருத்தே எடுபடும் என கூறியுள்ளார். எனவே 29ம் திகதி சட்ட ரீதியாக சாதகமான தீர்வு வரும் என எதிர் பார்க்கிறோம் என்றார்.

தொடர்ந்து அரசியல் கைதிகளின் உறவுக ள் கருத்து தெரிவிக்கையில்,

தர்சனின் அம்மா சித்திரா (அரசியல் கைதியின் தாய்)

பெருங்குற்றம் செய்தவர்கள் வெளியில் இருக்கின்றார்கள் சிறு சிறு குற்றங்கள். புரிந்து இருக்கலாம் அவர்களை விடுவிக்க வேண்டும்.உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் மகனின் உடல் நிலை மோசமாகியுள்ளது. கடுமையான நோய்கள் தோன்றியுள்ளன.

புஸ்பமாலா சுலக்சனின் அம்மா

கணவன் தான் பார்த்து வந்தார். நான் நாலைந்து வருடமாக பார்க்கவில்லை. இப்ப தான் மகனை பார்த்தேன்.கணவன் தற்போது உயிருடன் இல்லை. ஆண் துணையின்றி எனது பெண்களை வளர்த்து வருகிறேன். எனது மகனை விடுதலை செய்ய வேண்டும்.

சுபைதா திருவருள் (அரசியல் கைதியின் மனைவி)

கடவுளிடம் தான் மன்றாடி வந்தோம் வழக்கில் வென்று வவுனியாவுக்கு மாற்றப்படும் என நம்புறோம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு