மாகாண அமைச்சர்களாக சிறந்தவர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

ஆசிரியர் - Editor I
மாகாண அமைச்சர்களாக சிறந்தவர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

மாகாண அமைச்சர்களாக சிறந்தவர்களை தேர்வு செய்வதற்கு தவறியிருக்கும் வடமாகாண முதலமை ச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், உள்@ராட்சி சபை தேர்தலில் மக்கள் கட்சிகளையும், ஆட்களையும் பார்க் காமல் சிறந்த சேவையாற்ற கூடியவர்களை தேர்வு செய்யுங்கள் என கூறுவது எவ்வகை நியாயம் எ ன வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

வடமாகாணசபையின் 115வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிரு ந்தது. இந்த அமர்வில் விசேட கவனயீர்ப்பு விடயம் ஒன்றை கொண்டு வந்து உரையாற்றும்போதே தியாகராஜா மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கூறுகையில், எனக்கான சீ.பி.ஜீ ஒ துக்கீட்டின் கீழ் 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வேலை தி

ட்டங்கள் 2017ம் நிதியாண்டு முடிந்திருக்கும் நிலையிலும் செய்யப்படாமல் உள்ளது. இது எனது நன்மதிப்பை கெடுப்பதற்கான வேலையாக நான் பார்கிறேன். மேலும் இது அமைச்சருடைய தவறு மற்றய உறுப்பினர்களுடைய வேலை திட்டங்கள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னுடைய வேலைகள் மட்டும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. இத

ற்கு என்ன காரணம் என்பதை முதலமைச்சரும், அவை தலைவரும் அறியவேண்டும். அமைச்சரால் அதிகாரிகளை கொண்டு வே லை செய்ய இயலவில்லை என்றால் அதிகாரிகளை மாற்றவேண்டும். உள்@ராட்சி சபை தேர்தலில் மக்கள் ஆட்களை பார்க்காமல் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற கூடியவர்களை தேர்வு செய்யுங்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால் முதலமைச்சர் மாகா ண அமைச்சர்களாக சிறந்தவர்களை தேர்வு செய்துள்ளாரா? இல்லை முதலமைச்சர் மாகாண அமைச்சர்களாக சிறந்தவர்களை தேர்வு செய்வதற்கு தவறிவிட்டார் என குற்றஞ் சுமத்தினார். இந்த குற்றச்சாட்டுக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஷ்வரன் பதிலளிக்கையில், வேலைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுவிட்டத

hக எனக்கு கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் வேலைகள் முடிக்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக ஆராய்ந்து குறித்த அதிகாரிக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு