15 பிரசவங்கள் அம்புலன்ஸ் வண்டியில் நடந்துள்ளது.

ஆசிரியர் - Editor I
15 பிரசவங்கள் அம்புலன்ஸ் வண்டியில் நடந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் 15 பிரசவங்கள் அம்புலன்ஸ் வண்டியில் நடந்துள் ளதாக கூறியிருக்கும் மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் மன்னார் மாவட்ட i வத்திய சாலையில் நிரந்தரமான மகபேற்று நிபுணர் இல்லை எனவும், மத்திய அரசாங்கத் திடம் பல தடவைகள் கேட்டும் பயனில்லை எனவும் கூறியுள்ளார்.

வடமாகாணசபையின் 115வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் நிரந்தர மகப்N பற்று வைத்திய நிபுணர் இல்லாமையினால் நேற்று கர்பிணி தாய்மார் நடத்திய கவனயீர் ப்பு போராட்டம் தொடர்பாக விசேட கவனயீர்ப்பு ஒன்றை மாகாண

சபை உறுப்பினர் பா.டெனீஷ்வரன் சபையில் முன்மொழிந்தார். மேற்படி கவனயீர்ப்பு தொ டர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் நிரந்தர மாக மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லை. இந்நிலையில் கர்பி

ணி தாய்மாரை அம்புலன்ஸ் வண்டி மூலம் வெளிமாவட்ட வைத்தியசாலைகளுக்கு கொ ண்டு செல்லவேண்டிய தேவை எழுகின்றது. இந்நிலையில் கடந்த மாதம் மட்டும் 15 பிரச வங்கள் அம்புலன்ஸ் வண்டிகளில் நடந்துள்ளது. மேலும் ஒரு கர்பிணி தாயை அவசர சி கிக்சை பிரிவில் வைத்து மயக்க மருந்து கொடுக்க முடியாமல் வவு

னியா வைத்தியசாலைக்கு மாற்றவேண்டிய நிலை உருவானது. அங்கே மயக்க மருந்து நிபுணரும் இல்லை. இவ்வாறு பருத்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி போன்ற வைத்தி யசாலைகளிலும் மருத்துவர்கள் இல்லை. இது தொடர்பாக பல தடவைகள் மத்திய அர சாங்கத்துக்கு சுட்டிக்காட்டியும் இதுவரை ஆக்கபூர்வமான பதில்

கிடைக்கவில்லை. மேலும் முதலமைச்சரிடம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்த நிi லயில் அவர் ஜனாதிபதியை சந்தித்து இந்த விடயத்தை கூறுவதற்கான நேரத்தை கேட் டிருக்கின்றார். இதேபோல் நேற்றய தினம் ஆளுநரை சந்தித்தபோது இந்த விடயத்தை கூறினேன். அவர் எனக்கு கூறினார் உங்கள் வைத்தியர்கள் கொழு

ம்பில் வேலை செய்து கொண்டிருக்க அங்கிருந்து வைத்தியர்கள் இங்கே வருவார்களா? என அதற்கு நான் பதிலளிக்க முடியாமல் நின்றேன். எனவே வன்னி மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த விடயம் தொடர்பாக மத்திய அரசாங்க த்தின் கவனத்திற்கு கொண்டுவந்து ஒரு வைத்தியரை பெற்று கொடு

க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு