யாழினை ஊடுறுவி இலங்கையில் விஷ்வரூபமாக உருவெடுத்துள்ள ஆபத்துக்கள்!

ஆசிரியர் - Editor II
யாழினை ஊடுறுவி இலங்கையில் விஷ்வரூபமாக உருவெடுத்துள்ள ஆபத்துக்கள்!

தமிழரின் ஜனநாயக போராட்டத்திலும், கலாச்சாரத்திலும் மிகவும் உச்ச பலமாக இருந்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் என்பதை எவரும் மறுத்து விட முடியாது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தமிழ் கலாச்சாரத்தின் மையமாக திகழும் யாழ். குடா நாட்டில் இன்று பாரியளவில் கலாச்சாரம் சீர் குழைந்து விட்டது. இதற்கு உண்மையான காரணத்தை என்றாவது சிந்தித்தது உண்டா..?

அன்று கலாச்சாரத்தின் உச்சம் தொட்ட யாழில் தான் போதைப் பொருளின் பாவனையும் உச்சம் கண்டுள்ளது. யாழினை ஊடுறுவி இலங்கையில் கொலை, கொள்ளை, கடத்தல், வாள்வெட்டு என்று விஷ்வரூபமாக குற்றங்கள் வளர்ச்சி அடைந்து விட்டன.

கடந்த 2017ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் 990 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் போதைப் பொருள் பயன்படுத்தல், போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை செய்தல் என்பன ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

போதைப் பொருளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அதன் தாக்கமும், பாவனையும் குறைந்தபாடு இல்லை.

போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் முகமாக ஏற்படுத்தப்பட்ட தினமாகவே உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் (World Anti - Drugs Day) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று வர்த்தக ரீதியில் உலகெங்கும் போதைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. சட்டவிரோதமான கடத்தல் போன்ற வழிகளிலேயே இவ்வர்த்தகம் நடைபெறுகின்றது.

விஞ்ஞான வளர்ச்சி காரணமாக அவை நவீன உருவிலும், எளிமையான முறையிலும் தயாரிக்கப்படுகின்றது. மிகச் சிறிய அளவு பாவிப்பதன் மூலம் அதிகளவு போதை தரக்கூடியதாக அவை தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும், இவை இலகுவாக கடத்தவும் பரிவர்த்தனை செய்யவும் வாய்ப்பாக அமைந்தன. வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட ஹெரோயின், கொகேய்ன், மர்ஜுவானா, ஹஸீஸ் போன்ற போதைப்பொருட்களும் மற்றும் மாத்திரை வடிவத்திலும் போதைப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

பேதைப் பொருளை உடலிற் செலுத்திக் கொள்ளும் பழக்கம், தீவிர பாவனையாளரிடையே உள்ளது. இதனால் இப்படிப்பட்டவர்களிடத்தில் எய்ட்ஸ் வைரசும் தொற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.

இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை, உல்லாசப் பயணிகளின் வருகை போன்ற காரணிகள் நவீன போதைப் பொருட்கள் நாட்டினுள் பிரவேசிக்க வழிவகுத்தன.

இலங்கை அரசாங்கம் போதைப்பொருள்கள் அற்ற ஆண்டாக மாற்றியமைக்க வேண்டும் என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை சுங்கத் திணைக்களம் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகார சபை, குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு உட்பட பல அரச நிறுவனங்கள் இதற்கு எதிராக நடிவடிக்கை எடுத்துள்ளன.

போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு போதைக்கு முற்றுப்புள்ளி திட்டம் மட்டுமே போதுமானதல்ல, சகலரும் பூரண ஒத்துழைப்பின் மூலமே போதைப் பொருள் ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.

போதைக்கு அடிமையானோரை அதிலிருந்து மீட்டெடுப்பது, புதிதாக அப்பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சந்ததியினரைப் பாதுகாப்பது என்ற இலக்கிலேயே அரசாங்கம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அதே நேரம் இன்று இலங்கையின் நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பொறுத்தவரை இந்த நடவடிக்கைக்கு அவை போதியதாக இல்லை. உதாரணமாக ஒரு ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் 10 ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் அதற்கான தண்டனை ஒரே விதமாகவே உள்ளது எனவும் கூறப்படுகின்றது.

கடந்த 2017ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் 990 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.

332 கிலோ 500 கிராம் போதைப் பொருளை கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் கைப்பற்றியுள்ளனர். அவற்றின் பெறுமதியே 990 கோடி ரூபாய் என்றும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

குறித்த போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 29 ஆயிரத்து 690பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

என்னதான் வழக்குகள் தொடர்ந்தாலும் முற்றாக தடுக்க முடியவில்லை. மகிந்த ஆட்சியை போலதான் மைத்திரி ஆட்சியிலும் இதற்கு முடிவு இல்லை.

புதிய வருடமும் உதயமாகி ஒரு வாரம் கடந்து விட்டது. இந்த ஆண்டிலாவது, விடிவு கிடைக்குமா?

நல்லாட்சி அரசு கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டது என்றுதான் கூற வேண்டும். எதை கூறி ஆட்சிக்கு வந்தார்களே அது நிறைவேற வில்லை.

முன்னைய ஆட்சி காலத்திலும் பார்க்க நல்லாட்சி அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது என்பது மறுப்பதற்கு இல்லை என்றாலும், அதேபோல முன்னைய ஆட்சியை பார்க்கவும் இந்த ஆட்சியில் போதைப் பொருள் கடத்தல், கொலை, வாள்வெட்டு என்று குற்றச்செயல்கள் முன்னேறி உள்ளதற்கும் மாற்றுக் கருத்து இல்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு