ட்விட்டர் தளத்தில் இனி இப்படி செய்ய முடியாது!...
ட்விட்டர் தளத்தில் சமீபகாலங்களில் பல்வேறு மாற்றங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வரிசையில், ஒருவர் நாள் ஒன்றுக்கு எத்தனை பேரை பின்தொடர வேண்டும் என்ற எண்ணிக்கையில் மாற்றம் செய்திருக்கிறது.
ஸ்பேம் மற்றும் ரோபோட் பயன்பாடுகளை தடுக்கும் நோக்கில், ட்விட்டர் தளத்தில் பயனர் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 400 பேரை மட்டுமே பின்தொடர முடியும். முன்னதாக நாள் ஒன்றுக்கு பயனர் 1000 பேரை பின்தொடரும் வசதி வழங்கப்பட்டிருந்தது. புதிய மாற்றத்தின் மூலம் வெரிஃபைடு இல்லாத பயனர்கள் தினமும் 400 அக்கவுண்ட்களை பின்தொடரலாம்.
வெரிஃபைடு அக்கவுண்ட் வைத்திருப்போர் தினமும் 1000 பேரை பின்தொடரலாம். இதுதவிர பயனர் அதிகபட்சம் 5000 பேரை மட்டுமே பின்தொடர முடியும். 5000 பேரை பின்தொடர்ந்த பின் பயனர் குறிப்பிட்ட அளவு பின்தொடர்வோர் எண்ணிக்கையை கடக்கும் வரை காத்திருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு அக்கவுண்ட்டிற்கும் வேறுபடும். இது ஒவ்வொருத்தர் பின்தொடரும் அக்கவுண்ட்களுக்கு ஏற்ப வித்தியாசமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பின்தொடர்வதற்கான எண்ணிக்கையை கடந்ததும் பயனருக்கு “You are unable to follow more people at this time.” தகவல் கிடைக்கும். இந்த தகவல் பயனர் குறிப்பிட்ட நாளில் பின்தொடரும் அளவை கடந்ததும் திரையில் தோன்றும். இதே தகவல் பயனர் மொத்த பின்தொடர்வோர் எண்ணிக்கையை கடக்கும் போதும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.