மக்கள் கோபத்தில் : டாண் பணியாளர் தயா மாஸ்டர் மீதான தாக்குதல் வீடியோ வெளியானது! VIDEO

ஆசிரியர் - Admin
மக்கள் கோபத்தில் : டாண் பணியாளர் தயா மாஸ்டர் மீதான தாக்குதல் வீடியோ வெளியானது! VIDEO

ஆயுதமுனையில் இராணுவ பாதுகாப்புடன் யாழில் கேபிள் தொலைக்காட்சியை நடத்திவரும் டாண் தொலைக்காட்சி பொதுமக்கள் தாக்குதல்களை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது.தற்போது ஏற்பட்டுள்ள ஜனநாயக இடைவெளியில் மக்கள் திரண்டு முன்வந்து எதிர்ப்பு குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று டாண் தொலைக்காட்சியினுள் புகுந்த வயோதிபர் ஒருவர் அதன் செய்தி ஆசிரியரை தாக்கமுற்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் பணியாளரான வேலாயுதம் தயாநிதி என்பவரே தாக்கப்பட்டுள்ளார். தயா மாஸ்டர் என்றழைக்கப்பட்ட குறித்த நபர் பாதுகாப்பு அமைச்சின் சம்பளத்தின் கீழ் முந்திய பதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவினால் டாண் தொலைக்காட்சியில் இணைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் கத்தி மற்றும் பொல்லுடன் வந்திருந்த பொதுமகனான வயோதிபர் ஒருவர் தனது கேபிள் தொலைக்காட்சி இணைப்பு துண்டிக்கப்பட்டமை தொடர்பில் வாதிட்டுள்ளார்.

முன்னதாக தொலைபேசி வழி வேலாயுதம் தயாநிதியுடன் உரையாடியதை தொடர்ந்தே அவர் அலுவலகத்திற்கு நேரடியாக தேடி வந்ததாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே வேலாயுதம் தயாநிதியை வாக்குவாதம் முற்றிய நிலையில் குறித்த வயோதிபர் தாக்க முற்பட்டமையினையடுத்து டாண் ஊழியர்கள் அவரை பதிலுக்கு பலர் கூட்டாக சேர்ந்து தாக்கியுள்ளனர்.

பின்னர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் அவரை சிறைப்பிடித்து இலங்கை காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.

இதனிடையே இச்சம்பவத்தை பாரிய வன்முறையாக காண்பித்து மக்கள் ஆதரவை பெற அத்தொலைக்காட்சி தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

யாழ்.குடாநாட்டில் பல ஊடகவியலாளர்களது கொலைக்கான உத்தரவை பிறப்பித்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய மற்றும் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஹெந்தவிதாரணவின் பினாமி சொத்திலேயே டாண் தொலைக்காட்சி இயங்குவது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு