டெலோ குகதாஸ் வடமாகாணசபைக்கு செல்கிறார்!

ஆசிரியர் - Admin
டெலோ குகதாஸ் வடமாகாணசபைக்கு செல்கிறார்!

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள உறுப்பினர் வெற்றிடத்துக்கு ரெலோ அமைப்பின் எஸ்.குகதாஸ் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரென சொல்லப்பட்ட இவர் பின்னர் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையில் பணியாற்றியவரென மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆனோல்ட் தனது பதவியைக் கடந்த மாதம் துறந்தார். 

யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே அவர் தனது பதவி விலகலை அவைத் தலைவரிடம் கையளித்தார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எஸ்.குகதாஸ் வடக்கு மாகாண சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார். 

அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

டெலோ சிறீகாந்தாவின் ஆதரவுடன் தேர்தலில் குதித்த போதும்; எஸ்.குகதாஸ் தோல்விகண்டிருந்தார்.

இந்நிலையில் இவ்வாண்டுடன் வடமாகாணசபையின் ஆயுள்காலம் முடிவது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு