“நான் கொக்கல்ல“ – விக்னேஸ்வரனுக்கு துரைராசசிங்கம் பதிலடி!

ஆசிரியர் - Editor II
“நான் கொக்கல்ல“ – விக்னேஸ்வரனுக்கு துரைராசசிங்கம் பதிலடி!

தமிழரசுக்கட்சியின் செயலாளருக்கும் வடக்கு முதலமைச்சருக்கும் இடையிலான கருத்துமோதல் தொடர்கின்ற நிலையில் விக்னேஸ்வரன் இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகிறார் என்று தமிழரசுக்கட்சியின் செயலர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொரட்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சாடி வடக்கு முத­ல­மைச்­சர் வெளி­யிட்ட அறிக்­கைக்கு, தமிழ் அர­சுக் கட்­சிப் பொதுச் செய­லர் கி.துரை­ரா­ச­சிங்­கம், முதல்­வர் கட்­சித் தலைமை கிடைக்­க­வில்லை என்­ப­தால் தமிழ் அர­சுக் கட்­சிக்கு மாறா­கச் செயற்­ப­டு­கின்­றார் என்று பதி­லி­றுத்­தி­ருந்­தார். இதற்கு வடக்கு முத­ல­மைச்­சர், தான் அவ்­வா­றில்லை என்ற சாரப்­பட பதி­ல­ளித்­தி­ருந்­தார்.

இது தொடர்­பில் தமிழ் அர­சுக் கட்­சி­யின் பொதுச் செய­லர் கி.துரை­ரா­ச­சிங்­கம் பதில் கருத்து வெளியிட்­டுள்­ளார்.

அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது- விக்­னேஸ்­வ­ரன் ஐயா எனக்­குத் துரோ­ணாச்­சா­ரி­யார். நான் அருச்­சு­னன் அல்ல என்­றா­லும், ஐவ­ரில் ஒரு­வன். இல்­லை­யென்­றால் ஏக­லை­வன். அவ­ருக்கு அளிக்க வேண்­டிய கண்­ணி­யத்தை வழங்கி ‘உள்­ள­தை­யும் நல்­ல­தை­யும்’ சொன்­னேன். ‘விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய நினைத்­தாய்’ என்று நொந்­தேன்.

அவர் இல்­லா­த­தை­யும் பொல்­லா­த­தை­யும் எழு­து­கின்­றார். ‘எய்­தற்­க­ரிய தியைந்­தக்­கால் அந்­நி­லையே செய்­தற்­க­ரிய செயல்’ என்ற வள்­ளு­வம் போல், ஏற்­பட்­டுள்ள சூழ்­நி­லை­யைத் தவ­ற­வி­டாது தமி­ழி­னம் தழைக்க ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வோம் என்­றேன்.

‘தண்­ணீர் விட்டோ வளர்த்­தோம், சர்­வேசா! இப்­ப­யி­ரைக் கண்­ணீ­ராற் காத்­தோம் கரு­கத் திரு­வு­ளமோ’ என்று ஏங்­கு­வதை விட என்ன செய்ய? நாம் முடி­யுடை வேந்­தர் பரம்­பரை. ‘வட­வேங்­க­டம் முதல், தென்­கு­மரி ஆயி­டைத் தமிழ் கூறு நல்­லு­லகை’ எப்­ப­டியோ சுருக்கி இன்று குண்­டுச் சட்­டிக்­குள் குதிரை ஓடு­கின்­றோம்.

‘கற்­தூ­ணாய் நொருங்­கு­வோ­மன்றி, கால­ம­றிந்து செயற்­ப­டோம்’ என்­றி­ருப்­பது தமி­ழர் தம் தலை­வி­தி­யாக மாறி­வி­டக் கூடாது என்­பது என் எண்­ணம்.

‘தீதும் நன்­றும் பிறர்­தர வாரா’ என்­கி­றது புற­நா­நூறு. துரோ­ணாச்­சா­ரி­யார் விஸ்­வா­மித்­தி­ர­ராக விஸ்­வ­ரூ­பம் எடுக்­கின்­றார். நான் கொக்கு அல்ல. எனி­னும் அவர் மீதான மதிப்­பும் மரி­யா­தை­யும் என்­றும் உள்­ள­ப­டியே இருக்­கும்.

இனி­மேல் இது பற்றி நான் தொட மாட்­டேன். தொடங்­கி­ய­வரே முடிப்­ப­வ­ரும் ஆவார் என்ற மர­புப்­படி ஐயா முடித்து வைப்­ப­தா­யி­னும் சரி. அது அவர் திரு­வு­ளம் – என்­றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு