டான் தொலைக்காட்சி கலையகத்துக்குள் புகுந்து செய்திப் பணிப்பாளர் மீது தாக்குதல்.

ஆசிரியர் - Editor I
டான் தொலைக்காட்சி கலையகத்துக்குள் புகுந்து செய்திப் பணிப்பாளர் மீது தாக்குதல்.

"யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் டான் தொலைக்காட்சியின் கலையகத்துக்குள் புகுந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கியதுடன், கத்தியால் குத்திக் கொலை செய்ய முற்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்டவர் டான் நிறுவனப் பணியாளர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்"

இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகிய டான் செய்திப் பிரிவின் பணிப்பாளர் தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ சோதனைகளின் பின் அவர் விடுவிக்கப்பட்டார்.

"யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள டான் தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் இன்று மாலை 3.45 மணியளவில் ஒருவர் கத்தியுடன் அத்துமீறி நுழைந்தார். அவர் செய்திப் பிரிவுப் பணிப்பாளரை கதிரையால் தாக்கினார். தயா மாஸ்டரை கத்தியால் குத்த அந்த நபர் முற்பட்டார். எனினும் டான் ஊழியர்கள் தயாமாஸ்டர் மீது காப்பாற்றினர்.

இதனால் தடுமாறிய அந்த நபர் டான் நிறுவனத்திலிருந்து தப்பி ஓடினார். டான் ஊழியர்கள் அந்த நபரைத் துரத்திப் பிடித்தனர்.

சட்டவிரோத கேபிள் இணைப்புக்கு எதிராக டான் நிறுவனம் அரசிடம் முறைப்பாடு செய்த்து. அதனடிப்படையில் சட்டவிரோத கேபிள் இணைப்புக்களை அகற்றும் நடவடிக்கைகள் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே சட்டவிரோத கேபிள் இணைப்பை நடத்துவோரால் டான் நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படுகின்றன. அதில் ஒரு செயற்பாடே இது" என்று டான் நிறுவனத்தின் கணக்காளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு