அமெரிக்கத் தலையீட்டை வலியுறுத்தி போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை

ஆசிரியர் - Admin
அமெரிக்கத் தலையீட்டை வலியுறுத்தி போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை

வவுனியாவில் 777 ஆவது நாளாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது பிள்ளைகளுக்கான நீதியைப் பெற அமெரிக்கா தலையிட வேண்டும் என வலியுறுத்தி இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா, ஏ9 வீதி, வீதி அதிகார சபை முன்பாகவுள்ள அவர்களது போராட்ட கொட்டகை முன்பாக இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இராணுவத்தினர் ஒப்படைத்த தமது பிள்ளைகளை தேடி 777 நாட்களாக போராடி வருகிறோம். 

அரசாங்கமும் சரி, எமது தமிழ் அரசியல்வாதிகளும் சரி எமக்கு தீர்வைப் பெற்று தரவில்லை. நாம் இந்த அரசாங்கத்திலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிலும் நம்பிக்கையிழந்துள்ளோம்.

எமக்கான தீர்வை பெறறுத் தர அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் தலையிட வேண்டும். நாம் அமெரிக்காவை தலையிட கோரி ஒன்றரை இலட்சம் கையெழுத்துக்களைப் பெற்றுள்ளோம். 

இன்னும் ஒன்றரை இலட்சம் கையெழுத்து பெற்று மூன்று இலட்சம் கையெழுத்துக்களுடன் அமெரிக்காவுக்கு அனுப்பவுள்ளோம் என இதன்போது அவர்கள் தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் புகைப்படங்கள், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியனின் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு