கம்பரெலிய திட்டம் சாதனையல்ல..! அது கூட்டமைப்பு வாங்கிய லஞ்சம்.
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கப்படும் லஞ்சமே கம்பரெலிய திட்டம் என கூறியிருக்கும் முன்னாள் வடமாகாணசபை எதிா்கட்சி தலைவா் சி.தவராசா, சாதாரண லஞ்சம் அல்ல தோ்தலுக்கான லஞ்சம் என கூறியள்ளாா்.
தனியாா் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இது தொடா்பாக மேலும் அவா் கூறியுள்ளதாவது,
வரவு செலவு திட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கு, கம்பெரலியத் திட்டத்தினுாடாக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அபிவிருத்திக்கு நிதி வழங்குவதில் எந்தவித பிழையுமில்லை. ஆனால் அதனை தீர்மானிக்கும் சக்தியாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது தவறானதாகுமென சி.தவராசா குறிப்பிட்டார்.
மக்களின் தேவைகளை மக்களிடம் கேட்டு அறிந்து பணம் வழங்குவதே சரியானதாகுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக தேர்தல் நெருங்கும் சமயத்தில் இவ்வாறு கம்பெரலியத் திட்டத்தினுாடாக நிதி வழங்கப்படுவது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் இலஞ்சமாகவே கருதப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.