முச்சக்கர வண்டியை மறித்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிா்ச்சி..! பொலிஸாரை தள்ளிவிட்டு தப்பி ஓடிய சாரதி..
முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனையிட முயற்சித்த நிலையில் முச்சக்கர வண்டியின் சாரதி பொலிஸாரை தள்ளிவிட்டு ஓடி தப்பியிருக்கின்றாா். இதன் பின்னா் முச்சக்கர வண்டியை சோதனையிட்டபோது முச்சக்கர வண்டியிலிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வவுனியா நகாில் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து முச்சக்கரண்டியை சோதனைக்குட்படுத்தியபோது பொதி செய்யப்பட்ட கஞ்சாவை மீட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 7மணியளவில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் போதை ஒழிப்புப்பிரிவினருடன் பூந்தோட்டம் மயானத்திற்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்றினை வழிமறித்த பொலிஸார் அதில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.
இதன்போது முச்சக்கரவண்டியைச் செலுத்தி வந்த சாரதி முச்சக்கரவண்டியை கைவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் முச்சக்கரவண்டியை சோதனைக்குட்படுத்தியபோது 1கிலோ 265மில்லிக்கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் தப்பிச் சென்ற சந்தேக நபரைத் தேடி வருவதாகவும் முச்சக்கரவண்டி,கைப்பற்றப்பட்ட கஞ்சாவை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.