நீதிமன்றில் ஆஜராவதிலிருந்து விலக்கப்பட்டாா் ஆளுநா் சுரேன் ராகவன், ஆளுநரை பாதுகாத்தாரா மணிவண்ணன்..?

ஆசிரியர் - Editor I
நீதிமன்றில் ஆஜராவதிலிருந்து விலக்கப்பட்டாா் ஆளுநா் சுரேன் ராகவன், ஆளுநரை பாதுகாத்தாரா மணிவண்ணன்..?

ஆளுநருக்கு வழங்கப்பட்ட உணவில் புழு காணப்பட்டது தொடா்பான வழக்கில் ஆளுநா் ஆஜராகவேண்டியதில்லை. என நீதிவான் எம்.கணேசராஜா நேற்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளாா். இதனால் இன்று காலை நீதிமன்றில் ஆஜராகவேண்டிய ஆளுநா் அதிலிருந்து விடுபட்டுள்ளாா். 

இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உணவக முகாமையாளர் சார்பில் ஆஐரான சட்டத்தரணி மணிவண்ணன் பேரில் நீதவான் இக் கட்டளையை வழங்கினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவில் புழு காணப்பட்டது. குறித்த உணவுகளை வழங்கிய அப்பகுதி உணவகத்திற்கு எதிராக வழக்கு தொடப்பட்டிருந்தது. 

வழக்கு விசாரணையின் போது அது தொடர்பான தண்டனை இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்றும் குறித்த உணவகத்தை மீண்டும் திறக்கவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார். 

அன்றைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உணவக முகாமையாளர் சார்பில் மன்றில் தோண்றிய சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரிகாந்தா வடக்கு ஆளுநர் உணவகத்திற்குள் புகுந்த நடந்து கொண்ட விடயம் தொடர்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

இதன்படி குறித்த வழக்கு இன்று கட்ளைக்காக எடுத்துக் கொள்ளப்படும் போது ஆளுநர் மன்றில் தோண்ற வேண்டிய நிலை காணப்பட்டது. 

இவ் வழக்கில் ஆளுநரை மன்றில் ஆஜராவதை தவிர்த்துக் கொள்வதற்கு பல்வேறு முனைப்புக்களும், பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றது. 

குறிப்பாக உளவியல் ரீதியான அழுத்தங்கள் கடந்த சில தினங்களாக குற்றம் சாட்டப்பட்ட  உணவக உரிமையாளருக்கு கொடுக்கப்பட்டு வந்தது. 

இதனால் ஆளுநர் நீதி மன்றில் ஆஐராகாமல் குறித்த கட்டளையை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவிடம் உணவக உரிமையாளரால் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும் ஸ்ரிகாந்தா அதனை மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.

ஆளுநர் நீதிமன்றில் ஆஐராகத்தான் வேண்டும் நீங்கள் அநாவசியமாக பயப்படவேண்டாம் என்று ஸ்ரீகாந்த கூறியும் உரிமையாளர் தொடர்ந்தும் அவரை மன்றாடி வந்துள்ளார்.

ஆளுநரை மன்றில் ஏற்றுவதில் இருந்து ஸ்ரிகாந்தா பின்வாங்க மறுத்ததால் ஒரு கட்டத்தில் புதிய சட்டத்தரணி ஒருவரை ஏற்படுத்தி ஆளுநர் நீதிமன்றம் வருவதை தடுக்க முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டது. 

இதன்வழியான சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆளுநரை நீதிமன்றில் முன்னிலையாவதை தடுக்க தெரிவு செய்யப்பட்டு நீதவானிடம் கட்டளையும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு