யாழ்ப்பாணத்தில் 27 மந்திரவாதிகள்! நரித்தலைகளுடன் சிக்கிய பெண் சாமியர்கள்

ஆசிரியர் - Editor II
யாழ்ப்பாணத்தில் 27 மந்திரவாதிகள்! நரித்தலைகளுடன் சிக்கிய பெண் சாமியர்கள்

வட மாகாணத்தில் குறி சொல்வது மற்றும் மந்திரவாத நடவடிக்கையுடன் ஈடுபட்டு வந்த 27 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசா விதிகளை மீறி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த வாரம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, விசா விதிமுறைகளை மீறிய இந்தியர்களை கைது செய்தனர்.

யாழ் குடாநாட்டில் பல இடங்களில் 25 பேர் சுற்றி வளைக்கப்பட்டனர் எனவும், இரண்டு பேர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட இந்தியர்களில் 23 பேரில் ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் உள்ளடங்குகின்றனர். அவர்கள் தென்னிந்திய நகரங்களிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய இந்த இந்தியர்கள் வடக்கில் ஜோதிட செயல்பாடுகளிலும் குறி சொல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவான எதிர்கால பலன்கள் குறித்து கூறுவதற்கு 200 ரூபாய் மாத்திரம் அறவிடும் இந்த குழுவினர் சூனியங்கள், கட்டுகளை அகற்றுவதற்கு 20000 முதல் 30000 வரை அறவிடுவதாக தெரியவந்துள்ளது. தெய்வங்களின் படங்கள், பூஜை செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் நரி தலைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த இந்தியர்கள், 30 நாள் சுற்றுலா விசாவில் வருகைத்தந்துள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு