மதவெறியா்களின் செயற்பாட்டை கண்டித்து, மன்னாாில் இந்து சமயத்தவா்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
மதவெறியா்களின் செயற்பாட்டை கண்டித்து, மன்னாாில் இந்து சமயத்தவா்கள் போராட்டம்..

மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்டமையினைக் கண்டித்தும், நந்திக்கொடியை காலால் மிதித்தமை போன்றவற்றை கண்டித்து இன்று கா லை மன்னாாில் இந்து மக்களால் பாாிய கவனயீா்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டிரு க்கின்றது. 

குறித்த போராட்டம் இன்று காலை மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதியில் இடம் பெற்றது.காலை 8.30 மணியளவில் ஆலடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன் ஒன்று கூடிய மக்கள் மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதிக்குச் சென்றனர். பின்னர் குறித்த வீதியின் இரு பகுதிகளிலும் 

பல நூற்றுக்கணக்கான இந்து மக்கள் பல்வேறு வசனங்கள் எழுதிய பதாதைகளையும், நந்திக் கொடியினையும் கையில் ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையின் தலைவர் தர்ம குமார குருக்கள் 

தலைமையில் இடம் பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையினர்,இந்து மத குருக்கள் , இந்து மக்கள் என பல நூற்றுக்கணக்கானவ ர்கள் கலந்து கொண்டனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மேகன்றாசிடம் 

தமது கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையின் செயலாளரினால் கையளிக்கப்பட்டது.இதன் போது குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த மகஜரை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். 

இந்த நிலையில்,கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீண்டும் ஆலடிப்பிள்ளையார் ஆலயம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.கடந்த சிவராத்திரி தினத்தன்று திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கபட்டைமையை கண்டித்தே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு