காணாமல் ஆக்கப்பட்டவா்கள் குறித்த முக்கிய ஆவணம் மஹிந்தவிடம், 2011ம் ஆண்டே அதனை பாா்த்த கூட்டமைப்பு, உண்மையை உளறிய மாவை..!

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டவா்கள் குறித்த முக்கிய ஆவணம் மஹிந்தவிடம், 2011ம் ஆண்டே அதனை பாா்த்த கூட்டமைப்பு, உண்மையை உளறிய மாவை..!

இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது வெளிப்படுத்தப்படவேண்டும். என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சோ.சேனாதிராஜா, 

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் பெயா் பட்டியல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இருந்ததாகவும் அ வா் தமக்கு அதை காண்பித்ததாகவும் கூறியுள்ளாா். 

2011 மற்றும் 2012 ஆண்டு காலப்பகுதியில் மகிந்த, பசில் ராஜபக்ஸக்களுடன் பலமுறை சந்திப்புகள் இடம்பெ ற்றதாகவும் இதன்போது சிறையில் அடைக்கப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் முன்னாள் போராளிக ளின் விபரங்கள் அடங்கிய, ஏழு ஆவணங்களைக் காண்பித்தனர் என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர்களை , வவுனியா முகாமுக்குச் சென்று பார்வையிடலாம் எனத் தெரிவித்திருந்தனர் எனவும் எனி னும் தமது பிரதிநிதிகள் அங்கு சென்றபோது, முகாமுக்குள் இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை எனவும் தெரி வித்துள்ளாா். பாராளுமன்றில் நேற்றையதினம் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில்  

கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இறுதி யுத்தத்தின்போது போரா ளிகள், அவர்களின் உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர், இதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதேபோன்று,  இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் 

கைது செய்யப்பட்ட போராளிகளின் முழு விவரங் களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் காணப் பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்த கைய தொரு நிலையில் காணாமலாக்கப்பட்டவர் கள், இராணுவ த்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பது குறித்து 

அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு