5 ரூபாய் மாடு 50 ரூபாய் வைக்கோல் தின்ற கதையாம் இலங்கையின் செயற்கை மழை திட்டம், விழுந்தடித்து திட்டத்தை நிறுத்திய அதிகாாிகள்..

ஆசிரியர் - Editor I
5 ரூபாய் மாடு 50 ரூபாய் வைக்கோல் தின்ற கதையாம் இலங்கையின் செயற்கை மழை திட்டம், விழுந்தடித்து திட்டத்தை நிறுத்திய அதிகாாிகள்..

மவுசாகலையில் செயற்கை மழையை பெய்விக்கும் பரிசோதனைத் திட்டம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறை ஏற்படுத்தாததால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

செயற்கை மழையை பெய்விக்கும் முயற்சியாக கடந்த வாரம் மவுசாகலையில் முதலாவது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அத்திட்டம் கைவிடப்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார். முகில் படையும் புகாரும் குறைவாக இருந்தமையால் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்

பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் எதிர் பார்த்த பெறுபேறுகள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. க டந்த 22 ஆம் திகதி மவுசாகலையில் ஆரம்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதால் ஏற்படும் நஷ்டத்தை பரிசீலனைக்கு எடுத்தபின் அதனை இடைநிறுத்து வதென மின்சக்தி எரிபொருள் அமைச்சு தீர்மானித்துள்ளதென 

மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தாய்லாந்தைச் சேர்ந்த தொழில் நுட்ப நிபுணத்துவம் பெற்றவர்கள் ஊடாக செயற்கை மழை பெய்விக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது 

நாட்டில் வரட்சியான காலநிலையின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு