கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் முன்மாதிாியான நடவடிக்கை, மகிழ்ச்சி தொிவிக்கும் மக்கள்..
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களின் நன்மை கருதி நவீன வசதிகளுடன் கூடிய ஒழுங்குகளை வைத்தியசாலை நிா்வாகம் மேற்கொண்டுள்ள நிலையில், வைத்தியசாலை க்குவரும் நோயாளா்கள் மகிழ்ச்சி தொிவித்து வருகின்றனா்.
நீங்கள் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்திய சாலையை நாடும் போது வழமையாக உங்களுக்கு ஒரு சீட்டும் துண்டும் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இப்போது நீங்கள் வெளி நோயாளர் பிரிவுக்கு சென்றால் உங்கள் தேசி ய அடையாள அட்டை இலக்கம் மற்றும் பெயர் விலாசம் பெறப்பட்டு
பார்க்கோட் உடன் கூடிய அட்டை போன்று ஒன்று உங்களுக்கு பிரதி செய்யப்பட்டு ஏ4 தாளில் வழங்கப்படு ம். இது உங்கள் தரவுகளை கணினியில் சேமிக்க உதவும் நீங்கள் ஒருமுறை சிகிச்சை பெற்றால் அனைத்து விபர ங்களும் அதாவது உங்கள் நோயின் தன்மை நீங்கள் பெற்ற மருந்து காலம்
என்பன கண்னியில் பதிவேற்றம் செய்யப்படும். மீண்டும் நீங்கள் சிகிச்சைக்கு செல்லும் போது உங்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையை பரிசீலிக்கக் கூடிய வாறே இவ் நடமுறை செய்யப்பட்டுள்ளது ஆகவே உங்களுக்கு வழங்கப்பட்ட பார்க்கோட் அடங்கிய பிரதி ஓர் வைத்திய சாலை அடையாள அட்டையாக தொழிற்படும்
எனவே உங்களுக்கு வழங்கப்படும் பிரதியை கசக்காமல் பாவிக்க வேண்டும் ஏன் எனில் பார்கோட் கசங்கி னால் வாசிக்காது எனவே இதனை லெமினட் செய்து நாம் பாவிக்க வேண்டும். இவ் நடமுறை பலருக்கு தெரி யாது இதனை பகிர்ந்து அனைவரும் தெரிந்து கொள்ள உதவுங்கள்.