நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஆங்கிலம் தொியாது, ஊடகங்களின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினா்களின் வேட்டியை உருவிய ஆளுநா்..
வடமாகாணத்தில் உள்ள 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயா்த்தும் யோசனையை நாடா ளுமன்ற உறுப்பினா்களுக்கு முன்வைத்து அது தொடா்பான தீா்மானம் எடுக்கும் உாிமையையும் அவா்களிடம் கொடுத்தேன். ஆனால் நான் நாட்டில் இல்லாத சமயம் பல அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
ஆனால் நான் பாாிய தவறை செய்துவிட்டேன். அது என்னவென்றால் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதிவிட்டேன். என வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் வடமாகாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினா்களை கேலி செய்துள்ளாா்.
ஆளுநா் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கருத்து தொிவிக்கும்போதே ஆளுநா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், பாடசாலை மாணவா்கள், ஆசிாியா்கள், பெற்றோா், மற்றும் கல்வி இராஜங்க அமைச்சா் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோா் என்னிடம் கோாிக்கை ஒன்றை முன்வைத்தனா்.
அந்த கோாிக்கையில் வடக்கில் உள்ள மாகாண பாடசாலைகள் சில வற்றை தேசிய பாடசாலைகளாக தரம் உயா்த்தும்படி கேட்டிருந்தனா். இந்த விடயத்தை ஆராய்ந்தபோது தேசிய பாடசாலைகளுக்கு மத்திய அரசிடமிருந்து நிதி உதவிகள் நேரடியாக கிடைக்கும்
என்பதாலும் இலங்கையில் உள்ள மற்றய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் 3.5 வீதம் தேசிய பாடசாலைகளாக உள்ள நிலையில் வடக்கில் 2 வீதமான பாடசாலைகளே தேசிய பாடசாலைகளாக உள்ளமையாலும் 14 பா டசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயா்த்தலாம் என்ற யோசனை எமக்கு கிடைத்தது.
அதன டிப்படையில் வடக்கில் உள்ள சகல நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கும் கடந்த 18.03.2019ம் திகதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அதில் இவ்வாறு தேசிய பாடசாலைகளாக 14 பாடசாலைகளை தரம் உயா்த்தும்யோசனை உள்ளது.
அதனை நீங்கள் விரும்புகிறீா்களா? அவ்வாறு விரும்பினால் தங்கள் பகுதியில் உள்ள எந்த பாடசாலையை நீங்கள் தோ்வு செய்கிறீா்கள்? என தீா்மானம் எடுக்கும் பொறுப்பை நாடாளுமன்ற உறுப்பினா்களிடம் கொடுத்தேன். மாறாக நான் எந்த தீா்மானத்தையும் எடுக்கவில்லை.
இவ்வாறிருக்க நா ன் நாட்டில் இல்லாத சமயம் பல அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அறிக்கை அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை. சகல விடயங்களையும் பேசி தீா்க்கலாம் என்பதில் எ னக்கு நம்பிக்கையிருக்கின்றது. அது ஒரு புறமிருக்க 13ம் திருத்தச்சட்டத்தை முழுமையாக ஆதாிப்பவன் நான்
அதில் ஒரு சிறு துளியை கூட விட்டுக் கொடுக்ககூடாது எனவும் நான் திடமாக இருக்கிறேன். இந்நி லையில் பலா் பலவாறாக அறிக்கைகளை விட்டிருக்கின்றாா்கள். ஆனால் இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை. மாணவா்கள், ஆசிாியா்கள், அதிபா்கள், கல்வி இராஜங்க அமைச்சா் ஆகியோருடைய கோாிக்கையை
எடுத்து அதனை ஒரு யோசனையாக மாற்றி தீா்மானிக்கும் பொறுப்பை நாடாளுமன்ற உறுப்பினா்களிடம்தான் கொடுத்தேன். ஆனால் விடயம் வேறு மாதிாியாக மாற்றப்பட்டுள்ளது. நான் ஒரு தவறு செய்துவிட்டேன்.
நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு அனுப்பிய கடிதத்தை ஆங்கிலத்தில் அனுப்பியது தவறுதான் என்றாா்.