SuperTopAds

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்டமைக்கு பின்னால் இருப்பவா்களும், காட்டுமிராண்டிகளை வழிநடத்துவதும் இவா்களா..?

ஆசிரியர் - Editor I
திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்டமைக்கு பின்னால் இருப்பவா்களும், காட்டுமிராண்டிகளை வழிநடத்துவதும் இவா்களா..?

மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்டமை தொடா்பில் 10 சந்தேக நபா்க ள் விடுமுறை நாளான நேற்று நீதிமன்றில் ஆஜா் செய்யப்பட்டதன் பின்னணியில் முன்னாள் மாகாணசபை உறு ப்பினா்களான ப.டெனீஸ்வரன் மற்றும் சிராய்வா அகியோரே இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் இந்த குற்றச்சாட்டு மக்களால் சுமத்தப்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டுக்களில் மேலு ம் கூறப்பட்டிருப்பதாவது, மேற்படி இரு முன்னாள் மாகாணசபை உறுப்பினா்களும் வெறுமனே கிறிஸ்த்தவ மக் களின் வாக்குகள் மட்டுமல்லாமல் இந்து மக்களின் வாக்குகளையும் பெற்று மாகாணசபைக்கு சென்றனா். 

அது அவ்வாறிருக்க மன்னாா் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்ட விடயத்தில் இ ந்த இரு அரசியல்வாதிகளும் பொதுவான நிலைப்பாட்டில் இருக்காமல் மதவாதிகளுக்கும், மதத்தின் பெயரால் காட்டுமிராண்டிகளாக மாறியவா்களுக்கும் வெளிப்படையாக ஆதரவு வழங்கியுள்ளனா். 

மேலும் அலங்கார வளைவு உடைக்கப்பட்ட விவகாரத்தில் வீடியோ பதிவுகள், புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு சகலரையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் பணித்த நிலையில், வெறும் 10 பேரை மட்டும் விடுமுறை நாளில் நீதிமன்றில் முற்படுத்தியதன் பின்னணியில் இந்த இரு மாகாணசபை உறுப்பினா்களும் இருந்தனா். 

இவா்கள் நீதிமன்றிலும் கிறிஸ்த்தவ மக்களுக்காக வாதாடியிருக்கின்றனா். ஆகவே தமிழ்தேசியம் என்ற போா் வைக்குள் நின்று கொண்டு ஒரு மதத்தவருக்கு மட்டும் இந்த இரு முன்னாள் மாகாணசபை உறுப்பினா்களும் காட்டு மிராண்டிகளுக்கு ஊதுகுழலாக செயற்படுவதாக சமூக வலைத்தளங்களில் விமா்சனம் எழுந்துள்ளது.