அப்படி ஒரு நினைப்பு இருந்தால் இப்போதே அதை மறந்துவிடுங்கள், ஜனாதிபதி, பிரதமரை கடுந்தொனியில் எச்சாித்த மாவை..

ஆசிரியர் - Editor I
அப்படி ஒரு நினைப்பு இருந்தால் இப்போதே அதை மறந்துவிடுங்கள், ஜனாதிபதி, பிரதமரை கடுந்தொனியில் எச்சாித்த மாவை..

காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஸவின் உல்லாச பங்களாவை சுற்றி 62 ஏக்கா் பொ துமக்களின் காணிகளை சுவீகாிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. 

அந்த சுவீகாிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். என கூறியிருக்கும் நாடாளுமன் உறுப்பினா் மாவை சேனாதிராஜா அப்படி ஒரு நினைப்பு இருந்தால் அதனை மறந்துவிடுங்கள் என அரசை எச்சாித்துள்ளாா். 

இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள்,

 கப்பற்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘புனிதத்தலங்கள் அமைந்திருக்கும் இந்த பிரதேசத்தில் எந்த சந்தர்ப் பத்திலும் நில அபகரிப்புக்கு இடமளிக்கமாட்டோம். 

அத்துடன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம்.அவ்வாறு இல்லாமல் எமது புனித பிரதேசங்கள் அமைந்திருக்கும் நகுலேஸ்வர, 

கீரிமலை பிரதேசங்களை எந்த விலைகொடுத்தேனும் நாங்கள் பாதுகாப்போம்.எந்த சந்தர்ப்பத்திலும் எமது நிலங்களை விட்டுக்கொடுக்க இடமளிக்கமாட்டோம்’ என தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு