முல்லைத்தீவு மாவட்டத்தில் மண், மரம், கருங்கல் கொள்ளையிடும் கொள்ளைக்காரா்களை ஜனாதிபதி பாா்த்துக் கொண்டிருப்பது ஏன்..?

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மாவட்டத்தில் மண், மரம், கருங்கல் கொள்ளையிடும் கொள்ளைக்காரா்களை ஜனாதிபதி பாா்த்துக் கொண்டிருப்பது ஏன்..?

இயற்கை வளங்களை பாதுகாப்பதாக ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கூறிக் கொண்டிருக்கும் நிலையில் மறுக்கம் அரச திணைக்களங்களின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுக் கொண்டிரு க்கும் வள கொள்ளையை ஜனாதிபதி பாா்த்துக் கொண்டிருக்கின்றாா். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறும் மணல் அகழ்வு கிரவல் அகழ்வு கருங்கல் அக ழ்வு மரக்கடத்தல் என நீண்ட பட்டியல் காணப்படுகிறது. குறிப்பாக கொக்காவில் பகுதியில் அனுமதிப்பத்திர வி திமுறைகளை மீறி பாரியளவில் கிரவல் மண் அகழப்படுகின்றது.

அதிகாரிகள் கண்டுகொள்ளாது இருக்கிறார்கள் ஏன் இதன் உண்மைத்தன்மையை ஆராய்வதற்காக குறித்த இ டத்திற்கு சென்றபோது  வழங்கப்பட்ட அனுமதிக்கு மேலதிகமாக கிரவல் அகழப்படுவதை அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மூலம் உறுதிப்படுத்த முடிந்தது.

புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு நிதி செலுத்தப்பட்டு அனுமதி பெறப்பட்டே கிரவல் அகழப்ப டுகின்றது.எனினும், A9 வீதியிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்பட் டு  கிரவல் அகழப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.

பல்வேறு தேவைகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு இங்கிருந்து கிரவல் ஏற்றிச்செல்லப்படுகின்றது. குறிப்பா க கிறவல் அகழும்போது பாரிய மரங்கள் அழிக்கப்படுகின்றன மரங்கள் அழிக்கப்படும் போது வனவள திணை க்களம் வேடிக்கை பார்க்கிறது காட்டில் விறகு கொத்துபவர்களை பிடிப்பவர்கள் இவ்வாறு 

பாரிய அழிவை ஏற்படுத்தும் பணக்காரர்களை கண்டுகொள்ளாதது ஏன் என பிரதேச மக்கள் கவலை தெரிவி க்கின்றனர் .இதேபோன்று பல ஆண்டுகளாக குறித்த பகுதியில் பல ஏக்கர் காணிகள், காடுகள் அழிக்கப்பட்டு பாரிய குழிகள் தோண்டப்பட்டும் இன்றுவரை அவை மூடி மீள் மரநடுகை மேற்கொள்ளாதபோது 

புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் இந்த செல்வந்தர்களுக்கு அனுமதிகளை தொடர்ந்து எவ்வாறு வழ ங்குகின்றனர் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. குறிப்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் உட னடியாக நிறுத்தப்படவேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு குறித்த சம்பவங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள  தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்ப படிவங்களை கொண்டு சென்றால் அவற்றை ஏற்க பின்னடிக்கும் யாழ் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியம் 

தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பியும் அதற்கும் பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு