ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேற மக்கள் எதிர்ப்பு!
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறக் கூடாது என வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் லண்டனில் உள்ள ஹைட் பார்க் என்ற இடத்தில் கூடிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து விலகினால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும் என்று வலியுறுத்தினர்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறக் கூடாது என வலியுறுத்தும் பதாகைகளையும் ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர். இந்தக் கூட்டத்தில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கோலாவும், லண்டன் நகர மேயர் சாதிக் கானும் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்றவர்கள் பல்வேறு இசைக்கருவிகளையும் இசைத்தனர்.