மாட்டிறைச்சியில் நெழிந்த புழுக்கள், பொறுப்புவாய்ந்தவா்கள் பொறுப்பற்ற விதமான பதில்..

ஆசிரியர் - Editor I
மாட்டிறைச்சியில் நெழிந்த புழுக்கள், பொறுப்புவாய்ந்தவா்கள் பொறுப்பற்ற விதமான பதில்..

திருகோணமலை இலிங்கநகா் பகுதியில் மாட்டிறைச்சி கொள்வனவு செய்த நபா் ஒருவா் இறைச்சிக்குள் வெள் ளை நிறத்திலான புழுக்கள் இருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்திருக்கின்றாா். 

திருகோணமலை - மூர் பகுதியில் நபரொருவர் 800 ரூபா பணம் கொடுத்து ஒரு கிலோகிராம் இறைச்சியை வாங்கியுள்ளார்.

அந்த இறைச்சியிலேயே இவ்வாறு புழு காணப்பட்டுள்ளது. இது குறித்து மாட்டு இறைச்சி கடையின் உரிமையாளரை வினவிய போது,

இறக்க கண்டி சுகாதார பரிசோதகரின் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்பே முல்லைத்தீவு பகுதியிலிருந்து 70 கிலோகிராம் நிறையுடைய மாட்டினை கொண்டு வந்து 

இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்தோம் என தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து திருகோணமலை மாவட்டத்தின் இலிங்க நகருக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகரை தொடர்பு கொண்டு வினவிய போது,

தாம் விடுமுறையில் சென்றுள்ள காரணத்தினால் நாளை வந்து பரிசோதனை செய்வதாகவும், இது தொடர்பில் எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லையெனவும் பதிலளித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு