மின்வெட்டு குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை..! மின்சக்தி அமைச்சு அதிரடி.

ஆசிரியர் - Editor I
மின்வெட்டு குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை..! மின்சக்தி அமைச்சு அதிரடி.

எதிர்வரும் 10 நாட்களுக்கான மின் வெட்டு தொடர்பாக இன்று வெளியிடப்படும் தகவல்கள் பொய்யானவை என சக்தி, எரிசக்தி மற்றும் தொழில் அபிவிருத்தி அமைச்சு செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட  தெரிவித் துள்ளார்.

அவர் மேலும் வழங்கிய தகவல்கள் :

மின் வெட்டு தொடர்பாக மின்சார திணைக்களம் கேட்டிருப்பினும் அதற்கான அனுமதியை அமைச்சு இன்னும் வழங்கவில்லை. கடும் வரட்சி காரணமாக தேவைக்கு ஏற்ப மின்சாரத்தை விநியோகிக்க முடியாமல் உள்ளது. தொழில் துறைகளிடம் ஜெனரேட்டர்களை அதிகமாக பாவிக்குமாறு வேண்டியுள்ளோம். 

அதேபோல நகர சபைகளிடம் மின் பல்புகளை முடிந்த அளவு அணைத்து விடும் படி கேட்டுள்ளோம். அதே போல வீடுகளிலும் தேவைக்கு அதிகமான பல்புகளை அல்லது பாவிக்கும் இரண்டையாவது மக்கள் அணைத்து விட வேண்டுகிறோம்.

 இந்த பிரச்சனை இன்னும் 15 நாட்களுக்கு இருக்கும். அதன் பின் வழமைக்கு திரும்பிவிடும். மகாவலியின் நீர் குறைந்துள்ளமையால் அங்கு மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நாளைதான் மின் வெட்டு குறித்த முடிவு எடுக்கப்படும். இப்போது ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்

 2002ம் வருடம் உருவாக்கிய கால அட்டவணை என செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு