வில்பத்து காடழிப்பு பகுதிக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சா். வில்பத்து விவகாரத்தை பூசி மெழுகுமா ஐ.தே.கட்சி..?

ஆசிரியர் - Editor I
வில்பத்து காடழிப்பு பகுதிக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சா். வில்பத்து விவகாரத்தை பூசி மெழுகுமா ஐ.தே.கட்சி..?

வில்பத்து காடழிப்பு விவகாரம் இலங்கையில் தற்போது பேசு பொருளாக மாறியிருக்கும் நிலையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சா் அஜித் மன்னப்பெரும இன்று வில்பத்து காடழிப்பு பகுதி க்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிலமைகளை பாா்வையிட்டுள்ளாா். 

இன்று அங்கு சென்ற இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுள்ளார். இதன் போது கொழும்பில் இருந்து வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் வருகை தந்ததோடு, 

முசலி வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.அதனைத் தொடர்ந்து மேலும் விடுவிப்பு செய்யப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மரிச்சிக்கட்டி,பாலைக்குழி, கரடிக்குழி உள்ளிட்ட இடங்களையும் நேரடியாக சென்று பார்வையிட்டார். 

மேலும் கல்லாறு அமைச்சுக்குளம் பகுதியில் அமைக்கப்படவுள்ள கைத்தொழில் பேட்டைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து விளாத்திக்குளம் பகுதியில் வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட  இடத்தையும் 

நேரடியாக சென்று இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு