அலங்கார வளைவு உடைப்பு விவகாரம், அருட்தந்தை உள்ளிட்ட 10 போ் பொலிஸ் நிலையத்தில் சரண். நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை..

ஆசிரியர் - Editor I
அலங்கார வளைவு உடைப்பு விவகாரம், அருட்தந்தை உள்ளிட்ட 10 போ் பொலிஸ் நிலையத்தில் சரண். நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை..

மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைத்த விவகாரம் தொடா்பில் அருட்தந்தை உட் பட 10 பேருக்கு மன்னாா் நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. 

சந்தேக நபா்கள் சட்டத்தரணி ஊடாக இன்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை மன்னார் காவல் நிலையத்தில் பிரசன்னமாகி இருந்தனர். 

அருட்தந்தை ஒருவர் உற்பட 10 பேர் இவ்வாறு சட்டத்தரணி ஊடாக மன்னார் காவல் நிலையத்தில் பிரசன்னமா கி இருந்தனர்.

இவர்களில் மூன்று பெண்களும்,ஆறு ஆண்களும் அடங்குகின்றனர். குறித்த 10 பேரிடமும் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்ட மன்னார் காவல்துறையினர் 

பின்னர் அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்;.இதன் போது விசாரனைகளை மேற் கொண்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ அருட்தந்தையினை சொந்தப் பிணையிலும், 

ஏனைய 9 பேரையும் 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் செல்ல அனுமதித்ததுடன் இம்மாதம்; 29 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு