வில்பத்து காடழிப்பு, அமைச்சா் றிஷாட் பதியூதீனை என்ன செய்யபோகிறது அரசு..?

ஆசிரியர் - Editor I
வில்பத்து காடழிப்பு, அமைச்சா் றிஷாட் பதியூதீனை என்ன செய்யபோகிறது அரசு..?

வில்பத்து காடுகள் அழிப்பு விவகாரத்தில் முஸ்லிம் அமைச்சா் றிஷாட் பதியூதீன் மீதான விமா்சனங்கள் அண் மைக்காலத்தில் வலுக்க தொடங்கியிருக்கின்றது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினா் டிலான் பெரேராவு ம் அமைச்சா் றிஷாட் மீதான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளாா். 

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினா் டிலான் பெ ரேரா இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளாா். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்.

இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களுக்கு காணி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்தை அரசியல்வாதியொருவர் தவறாக பயன்படுத்தியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு காணி வழங்கப்பட்ட மக்களுடைய பட்டியலை எடுத்துப் பாருங்கள். அதில், குறித்த அரசியல்வாதியின் சொந்தங்களுக்கு முக்கிய காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டு, கொலைச் சம்பவம் ஒன்றும் மறைக்கப்பட்டுள்ளது. வில்பத்து பிரதேசத்திலாவது இடம்பெயர்ந்த அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு காணி வழங்குவது தவறான ஒரு நடவடிக்கை அல்ல.

இருப்பினும், காணி வழங்குவது என்ற போர்வையில், வில்பத்து வனப் பிரதேசம் அழிக்கப்பட்டுள்ளது. மற்றது, காணி வழங்கும் போது தனது சொந்தங்களுக்குள் வழங்கப்பட்டுள்ளது.

 இந்த அரசியல்வாதி கடந்த அரசாங்கத்திலும் அமைச்சர், இந்த அரசாங்கத்திலும் அமைச்சர்.

இந்த அமைச்சர் தான் ஒரு அமைச்சர் என்ற வகையில், தனது தவறை ஏற்றுக் கொண்டு இந்த நடவடிக்கையை நிறுத்திவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு