SuperTopAds

தமிழ் ஊடகவியலாளா்கள் படுகொலை தொடா்பில் நீதியை நிலைநாட்ட விசாரணை நடத்துங்கள்..! கூறுவது டக்ளஸ் தேவானந்தா.

ஆசிரியர் - Editor I
தமிழ் ஊடகவியலாளா்கள் படுகொலை தொடா்பில் நீதியை நிலைநாட்ட விசாரணை நடத்துங்கள்..! கூறுவது டக்ளஸ் தேவானந்தா.

தெற்கில் ஊடகவியலாளா்கள் அரசின் சலுகைகளை எவ்வாறு பெற்றுக் கொள்கிறாா்களோ, அவ்வாறு வடக்கு ஊடகவியலாளா்களுக்கும் சலுகைகள் கொடுக்கப்படவேண்டும். இந்த விடயத்தில் தற்போதைய ஊடக அமை ச்சா் றுவான் விஜேவா்த்தன கவனமெடுப்பாா் என நான் நம்புகிறேன். 

மேற்கண்டவாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவா னந்தா கூறியுள்ளாா். பாராளுமன்றில் கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீ ள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, 

வெகுசன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு ஆகிய இரு அமைச்சுகள் தொடர்பிலா ன குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அ வர் தெரிவிக்கையில்,

அதே நேரம், வடக்கிலே செயற்பட்டு வருகின்ற சில ஊடக நிறுவனங்கள் பணியாளர்களின் ஊதியத்திலிருந்து ஊழியர் சேமலாப நிதிக்கென அறவீடுகளை மேற்கொள்கின்ற போதிலும், அவற்றை ஊழியர் சேமலாப நிதிய த்தில் வைப்பிலிடாமல் ஏமாற்றி வருகின்ற கைங்கரியங்களில் ஈடுபட்டு வருவதால், 

பல ஊடகவியலாளர்களுக்கு அவர்களது இத்தகைய  தொழில் ரீதியிலான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின் றன. அவர்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு உட்படுகின்றனர். இவர்கள் தொடர்பில் ஒரு பொறிமுறை வகுக்கப்பட வேண்டியிருக்கின்றது.

அதேநேரம், கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் சில விசாரணைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்ற நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர் பில் தொடர்ந்தும் மௌனமே சாதிக்கப்பட்டு வருகின்றது. 

இவ்விடயம் தொடர்பில் நான் பலமுறை எடுத்துக் கூறியிருக்கின்றேன். எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களி ல் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மை நிலைமைக ளை மக்கள் அறிவதற்கு வழிவகுக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். 

அதேநேரம், கொல்லப்பட்ட ஊடகவியலாளர் குடும்பங்களுக்கும், கடந்த கால யுத்த காலகட்டத்திலும், அதறகுப் பின்னைய காலங்களிலும், வன்முறைச் செயற்பாடுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள  ஊடகவியலாளர்க ளுக்கும் இழப்பீட்டுத் தொகையொன்றை விசேட ஏற்பாடாக வழங்குவதற்கும் 

நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.