தமிழீழ விடுதலை புலிகள் காடுகளை பாதுகாத்தனா் என கூறும் ஜனாதிபதியே..! இவா்கள் எங்கே..? எழுந்து நிற்கும் கேள்வி.
இலங்கையில் 28 சதவீதமான காடுகளே தற்போது உள்ளது. அவற்றை பாதுகாத்தவா்கள் தமிழீழ விடுதலை புலிகள் என கூறும் ஜனாதிபதியே, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வனவள பாதுகாப்பு பிாிவின் பொறுப்பாளா் சக்தி மற்றும் அவருடைய குடும்பம் எங்கே? என உறவினா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.
அண்மையில் நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா இலங்கையில் 28 சதவீதமான காடுகளே தற்போது உள்ளதாகவும், அதனை பாதுகாத்தவா்கள் தமிழீழ விடுதலை புலிகள் என கூறியிருக்கி றாா். இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக கேள்வி ஒன்று எழுப்பபட்டுள்ளது.
அது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வனவள பாதுகாப்பு பிாிவின் பொறுப்பாளா் சக்தி மற்றும் அவருடைய குடும்பத்தாருடைய உறவினா்கள் அல்லது நண்பா்களால் எழுப்படுகின்றது. அதில் வனவள பாதுகாப்பு பிாிவின் பொறுப்பாளா் சக்தி மற்றும் அவருடைய குடும்பத்தினா் இறுதிப் போாில் சரணடைந்தனா்.
அவா்களுடைய தகவல் எதுவும் தொியாத நிலையில் அவா்களும் காணாமல்போனவா்கள் பட்டியலில் உள்ளனா். இந்நிலையில் வனவளத்தை பாதுகாத்தாா்கள் என பெருமைப்படும் ஜனாதிபதியே இவா்கள் எங்கே என அந்த கேள்வி எழுந்து நிற்கின்றது.